மாங்காய் - மட்டன் பிரட்டல் செய்வது எப்படி?





மாங்காய் - மட்டன் பிரட்டல் செய்வது எப்படி?

தேவையானவை:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்

மட்டன் - 200 கிராம் (மிடியம் சைஸ் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

இஞ்சி விழுது - 60 கிராம்

பூண்டு விழுது - 60 கிராம்

கரம் மசாலாத் தூள் - 20 கிராம்

மிளகாய்த்தூள் - 15 கிராம்

பச்சை மிளகாய் - 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)

நல்லெண்ணெய் - 10 மில்லி

மஞ்சள்தூள் - 10 கிராம்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 30 கிராம்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

மாங்காய் - கால்பகுதி மாங்காய் (நறுக்கவும்)
செய்முறை:
மாங்காய் - மட்டன் பிரட்டல்
பிரஷர் குக்கரில் மட்டன், இஞ்சி விழுது, பாதியளவு பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். 

தனியே ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மீதமுள்ள பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதில் பச்சை மிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மாங்காய்த் துண்டுகள் போட்டு வதக்கி, கடைசியில் வேக வைத்த மட்டனைப் போட்டுப் புரட்டி அடுப்பை அனைத்து இறக்கி பரிமாறவும்.
Tags: