திணை அரிசி இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?





திணை அரிசி இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?

தினை அரிசியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். 
திணை அரிசி இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?
தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.

திணை அரிசி புரதசத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்க உதவுகிறது. 

திணை அரிசியில் கண்களுக்கு நன்மை அளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. திணையில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். 
குழந்தைகளுக்கு வசம்பு அணிவிப்பதன் அவசியம் என்ன?
இதனால் பார்வை தெளிவடையும். சரி இனி திணை அரிசி கொண்டு சுவையான திணை அரிசி இனிப்பு பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
என்னென்ன தேவை?

தினை அரிசி - 2 கப், (சுத்தப்படுத்தியது),

பாசிப்பருப்பு - 1 கப்,

கெட்டி தேங்காய் பால் - 1 கப்,

முந்திரி, திராட்சை தலா - 15,

வெல்லம் பாகு காய்ச்சி வடித்தது - 1 கப் கெட்டியாக,

நெய் - 2 மேசைக்கரண்டி.

எப்படிச் செய்வது?
திணை அரிசி இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?
தினை அரிசியை லேசாக வறுத்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பையும் வறுத்து லேசாக தனியாக ½ மணி நேரம் ஊற வைக்கவும். 

வாய் அகன்ற பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் சேர்த்து தினையை வேக வைக்கவும். பாதி வெந்து வரும் போது பருப்பை சேர்க்கவும். 
நன்கு வேக வைக்கவும். நன்றாக வெந்த நிலையில் வெல்லப்பாகை சேர்க்கவும்.
Tags: