ரவை கொழுக்கட்டை செய்வது எப்படி?





ரவை கொழுக்கட்டை செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

ரவை - 1 கப்,

வெல்லப்பொடி - 1 கப்,

தேங்காய்த்துருவல் - 1 கப்,

முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், உப்பு - தேவைக்கு,

நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ரவை கொழுக்கட்டை
ரவையை வறுத்துக் கொள்ளவும். பின்பு ரவையில் சிறிது தண்ணீர் ஊற்றி பிசறி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். 
முந்திரி, திராட்சை, தேங்காய் துருவலை நெய்யில் வறுத்து ரவையில் சேர்த்து உப்பு, தண்ணீர், வெல்லப்பொடி, ஏலப்பொடி கலந்து பிசைந்து கொழுக்கட்டை களாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
Tags: