பூண்டு பொடி செய்வது எப்படி?





பூண்டு பொடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:
பூண்டு – 250 கிராம்,


காய்ந்த மிளகாய் – 10, 


உளுத்தம்பருப்பு – ஒரு கப், 

எண்ணெய் – ஒரு டீஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:
பூண்டு பொடி செய்வது
பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். பூண்டுடன்… மிளகாய், உளுத்தம் பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு.:

பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.
Tags: