கானாங்கெளுத்தி மீன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் !





கானாங்கெளுத்தி மீன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் !

மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் மிகவும் ஆரோக்கியமானதாக பல கட்டுரைகளில் சால்மன் மீனைத் தான் சொல்லி யிருப்பார்கள். 
கானாங்கெளுத்தி மீன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் !
ஆனால் அந்த சால்மன் மீனுக்கு இணையான சத்து இந்தியாவில் அதிகம் கிடைக்கும் கானாங்கெளுத்தி யில் உள்ளது.

கானாங்கெளுத்தி மீனை குழம்பு, ப்ரை செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் உள்ளவர்கள், இந்த மீனை வாரம் ஒருமுறை உட்கொள்வது நல்லது.
இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இது பல நன்மைகளை வாரி வழங்கும். 

இங்கு கானாங்கெளுத்தி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதய நோய்கள் தடுக்கப்படும்
இதய நோய்கள் தடுக்கப்படும்
கானாங்கெளுத்தி மீனில் ஒமோக-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளதால், இது இதய நோய்களைத் தடுக்கும். 

கானாங்கெளுத்தியில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மட்டுமின்றி, சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. 
எனவே இம்மீனை அடிக்கடி உட்கொண்டு வர, இதய பிரச்சனைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்
அபாயம் குறையும் கானாங்கெளுத்தி மீனில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்களான மோனோ - அன் - சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. 

இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நீங்கள் அசைவ பிரியராக இருந்து, உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிடுங்கள். 

ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

மூட்டு பிரச்சனைகள்
மூட்டு பிரச்சனைகள்
கானாங்கெளுத்தியில் மூட்டு பிரச்சனைகளைத் தடுக்கும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வர, மூட்டு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

புலனுணர்வு செயல்பாட்டை அதிகரிக்கும்
புலனுணர்வு செயல்பாட்டை அதிகரிக்கும்
ஆய்வில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் மக்கள் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றால் கஷ்டப்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. 
மேலும் இதில் உள்ள DHA அல்சைமர் அல்லது பர்கின்சன் நோயின் தாக்குதலைத் தடுக்கும்.

குடல் புற்றுநோய்
குடல் புற்றுநோய்
கானாங்கெளுத்தியில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனை புற்றுநோய் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டிக்கலாம். 
ஆய்வு ஒன்றிலும் குடல் புற்றுநோயுடன் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை உட்கொண்டால், வாழும் நாளை அதிகரிக்க முடியும் என்று கண்டறியப் பட்டுள்ளது
Tags: