சிம்பிளான தக்காளி சாதம் செய்யும் முறை !





சிம்பிளான தக்காளி சாதம் செய்யும் முறை !

தக்காளி சாதமானது செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். இப்போது தக்காளி சாதத்தை மிகவும் சிம்பிளான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சிம்பிளான தக்காளி சாதம்
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் – 1 கப்

தக்காளி – 5

உப்பு – தேவையான அளவு

வெங்காயம் – 1

பூண்டு – 6 பற்கள்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பட்டை – 1/2 இன்ச்

கிராம்பு – 2

கறிவேப்பிலை – சிறிது

பச்சை மிளகாய் – 1
செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

தக்காளியானது ஓரளவு வதங்கியதும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். தக்காளி கலவையானது தொக்கு போன்று சுருங்கும்.
அப்போது அதனை இறக்கி, அதில் சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான தக்காளி சாதம் ரெடி!!!
Tags: