முருங்கைப் பூ காபி தயார் செய்வது எப்படி?





முருங்கைப் பூ காபி தயார் செய்வது எப்படி?

முருங்கை மரங்களில் பூத்துக் குலுங்கும் பூங்காய் பூ பார்க்க அழகாக இருக்கும். உடல் வலிக்கு இது பயனுள்ளதாக இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான தாதுவான வைட்டமின் ஏ உள்ளது.
முருங்கைப் பூ காபி தயார் செய்வது எப்படி?
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் அதிக வேலை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பார்கள். 

அவர்கள் உணவில் முருங்கைப் பூவை சேர்த்துக் கொண்டால் உடல் சோர்வு மற்றும் மன சோர்வு இரண்டும் காணாமல் போகும்.முருங்கைப் பூக்கள் தாய்மார்களின் பால் சுரப்பை மேம்படுத்தவும், ஆண்களுக்கு உயிரணு ஊக்கியாக செயல்படுகிறது. 

கடுகு, பூண்டு, வெங்காயம், சிறிது காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பூக்களுடன் சேர்த்து வறுத்துச் சாப்பிட்டு வர, பெண்களின் உடல் வலுப்பெறுவதோடு, தாய்ப்பால் பெருகும். 

இதனை ஆண்கள் சாப்பிட்டால், உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, செல் தரத்தை அதிகரிக்கிறது. பொதுவாக இது உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்கும் சிறந்த மூலிகையாகும்.

முருங்கைப் பூக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் உலர் பொடி மற்றும் பூவை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். 

சரி இனி முருங்கைப் பூ பயன்படுத்தி டேஸ்டியான முருங்கைப் பூ காபி தயார் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை

முருங்கைப் பூ பொடி

பனங்கற்கண்டும்

ஒரு டம்ளர் தண்ணீர்

செய்முறை :
முருங்கைப் பூ காபி செய்வது
முருங்கைப் பூவைச் சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்ய வேண்டும். காய்ச்சிய பாலில், இந்தப் பொடியும் பனங்கற்கண்டும் சேர்த்துக் கலக்கி அருந்தலாம்

நன்மைகள்

முருங்கை பூவில் விட்டமின் A, B6, B9, கால்சியம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளது.
குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி செய்வது எப்படி? 
எனவே இது உடல் மற்றும் எலும்பை வலிவாக்கி, ரத்தசோகை பிரச்சனையை போக்கி, ஆண்மை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பூ உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூக்களை சுத்தப்படுத்தி, வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். 

இந்தப் பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். இதனை நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் தூக்கமின்மை, நரம்பு நோய்கள் நீங்கி உடல் குதூகலமாக இருக்கும்.
Tags: