தாமரைப்பூ காபி தயார் செய்வது எப்படி?





தாமரைப்பூ காபி தயார் செய்வது எப்படி?

வெண் தாமரை, செந்தாமரை, ஆகாசத் தாமரை, கல்தாமரை என நான்கு வகைகள் உள்ளது. வெண்மையான இதழ்கள் கொண்டது.
தாமரைப்பூ காபி தயார்
வெண்தாமரை, சிவந்த இதழ்கள் கொண்டது செந்தாமரை என்றும், நீரில் அந்தரமாய் வேரோடி கொத்தாக இருப்பதுஆகாசத் தாமரை என்று கூறப்படுகிறது. 

கல்தாமரை என்பது மலர் அல்ல, கற்பாறைகளின் வெடிப்புகளில் வளருவதால் இவை கல்தாமரை என்றும், இதன் இலையை தான் பயன்படுத்த முடியும். மேலும் தாமரை பூ ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுவதாக கூறப்படுகிறது.

தாமரை மலர்களில், வைட்டமின் பி, சி, ப்ரோடீன், இரும்புசத்துகள் காணப்படுகின்றன. அதிலும் தாமிர சத்து அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. 

வெண்தாமரை இதய மற்றும் மூளை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகின்றது. செந்தாமரை மூல உஷ்ணத்திற்கு பெரிதும் பயன்படக் கூடியவை. 

கல் தாமரையின் இலையை காயவைத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை என நீரில் ஒரு சிட்டிகை அளவு கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கும், மூளை பலம் பெறும். 

குழந்தைகளுக்கு வரும் வலிப்பு, மற்றும் காய்ச்சல் வந்தாலோ, தாமரை பூ கஷாயம் கொடுத்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். 

வெண் தாமரையின் மலர்களின் காம்பு நீக்கி, இதழ்களை உலர்த்தி, தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி சிறிது சக்கரை கலந்து, காலை-மாலை இரு வேளையும், இந்த கஷாயம் குடித்து வந்தால் விரைவில் இப்பிரச்சனை நீங்கும்.

தேவையானவை.:

தாமரைப் பூ தேவையான அளவு

ஏலக்காய்

கிராம்பு

செய்முறை. :

இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப் பூவைப் போட்டுக் கொதிக்க விட வேண்டும். கொதி வரும் போது மிளகு, ஏலக்காய், கிராம்புப் பொடி சேர்க்கவும்.

முக்கால் டம்ளர் அளவு வந்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். 

நன்மைகள் :

இந்த தாமரைப்பூ காபியில் ஆன்டி- ஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் ஆகியவை நிறைந்துள் ளதால், 

இது புற்றுநோய் வராமல் தடுத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

குறிப்பு :
உங்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற டீ மற்றும் காபி வகைகள். நீங்கள் காலை, மாலை, இரவு என விரும்பி நேரத்தில் சாப்பிடலாம். 

எப்போதும் உணவு பொருட்கள் தூய்மையாக இருப்பது நன்று.
Tags: