பனீர் புர்ஜி செய்வது எப்படி?





பனீர் புர்ஜி செய்வது எப்படி?

தேவையானவை.:
பனீர் துருவல் – ஒரு கப் வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)

குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

கொத்த மல்லித்தழை – சிறிதளவு

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பனீர் புர்ஜி செய்வது
வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். 

அதனுடன் குடமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வேக விடவும். 
பிறகு பனீர் துருவல், கொத்த மல்லித்தழை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, கிளறி இறக்கவும்.
Tags: