பிரட் ரோல் அப் செய்வது எப்படி?





பிரட் ரோல் அப் செய்வது எப்படி?

கோஸ் சீனாவின் பிரதான காய்கறிகளில் ஒன்று. இந்தியாவிலும் கோஸ் வாரம் ஒரு முறையேனும் உணவில் சேர்த்து விடுவார்கள். 
பிரட் ரோல் அப் செய்வது
அப்படி கோஸ் சமையலுக்குப் பயன்படுத்தும் போது முதல் இரண்டு இலைகளை எடுத்து விட்டு தான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். 

அந்த தேவையில்லை என நினைக்கும் கோஸ் இலைகளை குப்பையிலும் எறிந்து விடுவார்கள்.  ஸ்பிரிங் ரோல் தான் பலரும் கேள்விப் பட்டிருக்கக் கூடும். வீட்டிலும் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். 

ஆனால் அதற்கு அதிக எண்ணெய் தேவைப்படும். மைதா மாவில் தான் செய்ய வேண்டும். இதனால் சில ஆரோக்கியமற்ற விஷயங்களும் உள்ளன. 

எனவே இதற்கு மாற்றாக நீங்கள் கழித்த இலைகளை நன்கு அலசி சுடு தண்ணீரில் அலசி பாக்டீரியாக்கள் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

பின் நீங்கள் நினைக்கும் ஸ்டஃபை அதில் வைத்து ரோல் செய்து ஆவி கட்டி சாப்பிடலாம் அல்லது தவாவில் சுட்டும் சாப்பிடலாம். சுவையும் அருமையாக இருக்கும்.

தேவையானவை.:

பிரெட் ஸ்லைஸ்கள் – 4

வெண்ணெய் – தேவையான அளவு

கோஸ் இலைகள் – 4

கேரட் துருவல் – கால் கப்

சீஸ் ஸ்லைஸ்கள் – 4

மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு அப்பளக் குழவியால் தேய்க்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் ஓரத்தில் மற்றொரு பிரெட்டை ஸ்லைஸ் வைத்து இணைத்துத் தேய்க்கவும்.

இதே போல 4 பிரெட் ஸ்லைஸ் களையும் இணைக்கவும். அதன் மீது வெண்ணெய் தடவவும். பிறகு, அதன் மேல் கோஸ் இலைகள், சீஸ் ஸ்லைஸ்களை வரிசையாக வைக்கவும்.
அதன்மீது கேரட் துருவல், மிளகுத்தூள், உப்பு தூவி பாய் போல சுருட்டவும். இதை ஒரு பட்டர் ஷீட்டில் வைத்து பாய் போல சுருட்டவும். அரை மணி நேரம் கழித்து, பட்டர் ஷீட்டை நீக்கி விட்டுத் துண்டுக ளாக்கிப் பரிமாறவும்.
Tags: