ரமலான் நோன்பில் அரபு நாடுகளில் செய்யும் ஹரீஸ் !





ரமலான் நோன்பில் அரபு நாடுகளில் செய்யும் ஹரீஸ் !

ரமலான் நோன்பில் அரபு நாடுகளில் செய்து சாப்பிடக்கூடிய பிரசித்தமான உணவாகும்.நாமும் செய்து பார்ப்போம்.
அரபு நாடுகளில் செய்யும் ஹரீஸ்
தேவையான பொருட்கள்;
உடைத்த கோதுமை -200 கிராம்

மட்டன் அல்லது சிக்கன் - 400 கிராம்

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 4 டேபிள் ஸ்பூன்

வறுத்து பொடித்த சீரகத்தூள் - அரை ஸ்பூன்

வறுத்து பொடித்த பட்டைத்தூள் - கால் ஸ்பூன்(விரும்பினால்)

உப்பு - தேவைக்கு

செய்முறை.:
கோதுமையை ஒரு நாள் இரவு முழுவதும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். 

முதல் நாள் மதியம் ஊறப் போட்டால் மறு நாள் மதியம் இப்படி நன்கு ஊறி விடும்.தண்ணீர் மாற்றி வேறு தண்ணீர் வைத்து சமைக்கவும்.
ஊறிய கோதுமை, சிக்கன் அல்லது மட்டன் தேவைக்கு உப்பு, மேல் நிற்கும் அளவு தண்ணீர் வைத்து வேக வைக்கவும்.

கொதிவரவும் மூடவும்.அடுப்பில் என்றால் நேரம் அதிகம் ஆகும்,எனவே குக்கரில் முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து அரை- முக்கால் மணி நேரம் வேக வைக்கவும். 

குக்கரை திறந்து நன்கு அடித்து மசிக்கவும், அதனுடன் நெய், சீரகத்தூள், பட்டைதூள் (விரும்பினால்) சேர்க்கவும், கையால் அடிக்க சிரமாய் இருந்தால் ஃபுட் ப்ராசஸ்சரில் போட்டு கடைந்து எடுக்கவும்.

கறியும் கோதுமையும் சேர்ந்து நன்கு மிக்ஸ் ஆகி அருமையாக பேஸ்ட் மாதிரி வரும் பொழுது எடுக்கவும். அதனை செர்விங் பவுலில் எடுத்து வைத்து மேலே விரும்பினால் ஆலிவ் ஆயில் விடவும்.

சுவையான சத்தான ஹரீஸ் ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம், நோன்பு நேரத்தில் நோன்பு திறக்க ஏற்ற உணவு, இதுவும் நம்ம அரிசி கஞ்சி போலத்தான். நம்ம நாட்டில் கஞ்சி அரபு நாட்டில் ஹரீஸ்.

குறிப்பு:

இதற்கு வெள்ளைக் கோதுமை என்றால் பார்க்கவும், ருசியும் அருமையாக இருக்கும்.உடைக்காமலும் ஊற வைத்து வேக வைக்கலாம்.
எலும்புடன் கறி சேர்த்தால் வெந்த பின்பு எலும்பை அரீஸ் அடிக்கும் பொழுது எலும்பை எடுத்து விடவேண்டும். ஒட்டக நெய் அரபி வீட்டில் சேர்ப்பார்களாம், 
அதன் ருசி தனியாம்.நான் அதிகம் நெய் சேர்க்க வேண்டாம் என்று ஆலிவ் ஆயில் சேர்த்து உள்ளேன், பட்டை தூள் விரும்பாதவர்கள் நெயில் உடைத்த பட்டையை சிறிது தாளித்தும் கொட்டலாம்.

சாப்பிடும் பொழுது பட்டையை எடுத்து விடவும். நீங்களும் விரும்பினால் செய்து பாருங்க
Tags: