சேனைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படி?





சேனைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:

சேனைக்கிழங்கு - 250 கிராம்,

சோம்பு - ஒரு டீஸ்பூன்,

கசகசா - ஒரு டீஸ்பூன்,

பூண்டு - 4 பல்,

சின்ன வெங்காயம் - 2,

மிளகாய் வற்றல் - 6,

தனியா - 1 டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

எண்ணெய் - 100 மில்லி,

உப்பு - தேவையான அளவு.
செய்முறை.:
சேனைக்கிழங்கு சாண்ட்விச்

சேனைக்கிழங்கை தோல் சீவி பிரெட் ஸ்லைஸ் வடிவத்தில் நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.

சோம்பு, கசகசா, பூண்டு, மிளகாய் வற்றல், தனியா, வெங்காயம், உப்பு ஆகிய வற்றை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
வேக வைத்த சேனைத் துண்டுகளின் இருபுறமும் அரைத்த மசாலாவை தடவி, நான் -ஸ்டிக் தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுத்து இறக்கவும்.

குறிப்பு.:

மசாலா வாசனையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
Tags: