காய்கறி கோதுமை போண்டா செய்வது எப்படி?





காய்கறி கோதுமை போண்டா செய்வது எப்படி?

காய்கறி கோதுமை வைத்து போண்டா எப்படி மொறு மொறு செய்யலாம் பார்க்கலாம்.
காய்கறி கோதுமை போண்டா
தேவையான பொருட்கள்
கோஸ் - 1 கப்

கேரட் - 1

இஞ்சி - 1/2 துண்டு

பச்சை மிளகாய் - 1

வெங்காயம் - 1

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

கோதுமை மாவு - 1/2 கப்

சோள மாவு - 1 தேக்கரண்டி

சமையல் சோடா - 2 சிட்டிகை

தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கோஸ் பொடியாக நறுக்கி போடவும். பிறகு கேரட் பொடியாகத் துருவி போடவும். பிறகு இஞ்சி பொடியாக நறுக்கி போடவும்.
பிறகு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போடவும். பிறகு வெங்காயம் பொடியாக நறுக்கி போடவும். பிறகு சீரகம் சேர்க்கவும்.
பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கி போடவும். பிறகு மிளகாய் தூள் சேர்க்கவும். பிறகு உப்பு , கரம் மசாலா சேர்க்கவும்

பிறகு கோதுமை மாவு சேர்க்கவும். பிறகு சோள மாவு சேர்க்கவும். பிறகு சமையல் சோடா சேர்க்கவும். பிறகு தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
Tags: