அதிகமாக தண்ணீர் குடிப்பது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஹைப்போநெட்ரோமியா பற்றி நீங்கள் கேள்வி பட்டது உண்டா? நமது உடலில் உள்ள சோடியம் அளவானது சாதாரண அளவை விட குறைவாக உள்ள நிலை தான் ஹைபோநெட்ரீமியா என்று அழைக்கப்படுகிறது. 
அதிகமாக தண்ணீர் குடிப்பது உயிரிழப்பை ஏற்படுத்துமா?
இந்த ஹைபோநெட்ரீமியா நோயாளி களுக்கு தண்ணீர் ஒரு எதிரி என்றே கூறலாம். நாமெல்லாம் என்ன செய்வோம் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் குடிப்போம். 

ஆனால் இந்த பாதிப்பு உடையவர்கள் தாகம் எடுக்கும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். 

அதையும் மீறி அதிகமாக குடித்தால் உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடம்பில் சோடியம் அளவு குறைவாக உள்ள நபர்கள் தேவைப்படும் போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 
நாம் உடற்பயிற்சி செய்த பின் நாம் தண்ணீர் குடிப்பது மாதிரி ஹைபோநெட்ரீமியா நோயாளிகளால் நிறைய தண்ணீர் குடிக்க முடியாது. 

அவர்களின் தாகத்திற்கு ஏற்ப மட்டுமே தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. இல்லை யென்றால் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளதாம்.

ஹைபோநெட்ரீமியா என்றால் என்ன?

ஹைபோநெட்ரீமியா என்பது மனித உடலில் சோடியம் குறைவாக இருப்பதால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலை. இது நீண்ட காலத்திற்கு மற்ற நோய்களைத் தூண்டும் வாய்ப்புள்ளது. 
ஹைபோநெட்ரீமியா என்றால் என்ன?
இது நோயாளிக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக உணவில் சேர்க்கப்படும் உப்பு குறைவாக இருப்பது காரணமாகிறது. 

உணவில் சோடியம் உப்பு சேர்க்கப்படுவது அவசியமாகிறது. நமது உடலில் உள்ள சோடியம் அளவு சீராக இருக்க வேண்டும் என்றால் உணவில் சேர்க்கப்படும் உப்பும் போதுமானதாக இருக்க வேண்டும். 

அப்படி உப்பிலுள்ள சோடியம் அளவு குறையும் போது நமக்கு ஹைபோநெட்ரீமியா ஏற்படுகிறது.

சோடியத்தின் பங்கு
பொதுவாக, நம் உடலில் சோடியத்தின் அளவு 135-145 mEq/L க்கு இடையில் இருக்கும். சோடியம் அளவு 135 mEq/L க்கும் குறைவாக இருந்தால் ஹைபோ நெட்ரோமியா ஏற்படலாம். 

சோடியம் என்பது நமது உடலில் உள்ள ஒரு வகை எலக்ட்ரோலைட் ஆகும். இது உடலில் உள்ள செல்களின் நீர் நிலைகளை பராமரிக்கிறது.
சோடியத்தின் பங்கு
மூளையில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதிலும் சோடியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தசை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. 

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அவை செல்களின் சோடியம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். 
இதனா‌ல் அதிகப் படியான தண்ணீர் செல்களுக்குள் சென்று செல்கள் விரிவடைய ஆரம்பிக்கும். இப்படி செல்கள் விரிவடைவதால் பலவித பிரச்சனைகள் உண்டாகி, உயிருக்கே ஆபத்தாக வாய்ப்புள்ளது.

அதிக நீர்ச்சத்து மற்றும் ஹைபோநெட்ரீமியா

அதே மாதிரி உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கும் இந்த ஹைபோநெட்ரீமியா ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்த பின் தாகத்திற்கு ஏற்ப மட்டும் தண்ணீர் அருந்த வேண்டும். 

தாகத்தையும் மீறி அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் போது உடற்பயிற்சியுடன் தொடர்புடைய ஹைபோ நெட்ரோமியாவைத் தூண்டுகிறது. 
அதிக நீர்ச்சத்து
வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவம்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ஹைபோ நெட்ரோமியா நோயாளி களுக்கு சில வழிகாட்டுதல் களை வனப்பகுதி மருத்துவ சங்கம் கூறியுள்ளது . 

வெப்ப பக்கவாதம் அல்லது வெப்ப சோர்வு போன்ற நோயாளிகளை ஆராய்ந்த பிறகு இதை கூறுகின்றனர்.
40 ஆண்டுகால உலகளாவிய ஆவணமாக்கலுக்கு பிறகும் இந்த உடற்பயிற்சி ஹைபோநெட்ரீமியா பாதிப்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்கிறார்கள். 
வெப்பம் சம்பந்தமான நோய்கள் அல்லது நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்களுக்கு வாய்வழி ஹைப்போடோனிக் திரவ உட்கொள்ளலை ஊக்கு விக்கிறார்கள் மருத்துவர்கள். 

விரைவான ஐசோடோனிக் IV திரவங்களை வழங்குதல் போன்ற சிகிச்சை களை வழங்குகிறார்கள். இருப்பினும் இறப்பு விகிதம் அதிகமாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சில சிறப்பம்சங்கள்:
சில சிறப்பம்சங்கள்
* நீடித்த உடற்பயிற்சியின் போது நீங்கள் குடிக்கும் அதிகப்படியான நீர் இதற்கு காரணமாகிறது. எனவே அதை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.

* உடற்பயிற்சி செய்யும் நபர்களோ அல்லது ஹைபோநெட்ரீமியா உள்ள நபர்களோ தாகத்தை தீர்க்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடியுங்கள்.
* ஹைபோநெட்ரீமியா இருப்பவர்கள் உப்பு பிஸ்கட் மற்றும் உப்பை உணவில் சேர்ப்பது, உப்பு பண்டங்களை உட்கொள்ளுங்கள்

ஹைபோநெட்ரீமியாவின் அறிகுறிகள்:
ஹைபோநெட்ரீமியாவின் அறிகுறிகள்
* குமட்டல் மற்றும் வாந்தி

* தலைவலி

* குழப்பம்

* ஆற்றல் இழப்பு மற்றும் சோர்வு

* தசை பலவீனம், பிடிப்பு அல்லது பிடிப்புகள்

* வலிப்பு

* கோமா

* வாந்தியெடுத்தல், தசைப்பிடிப்பு மற்றும் கோமா போன்ற கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚