சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி?





சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
கம்பு - ஒரு கப்,

தினை - ஒரு கப்,

கேழ்வரகு - ஒரு கப்,

ஏலக்காய் - 4,

கருப்பட்டி - 2 கப்,

தேங்காய்த் துருவல் - 1 கப்

செய்முறை
சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை
கம்பு, தினை, கேழ்வரகு ஆகிய வற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகிய வற்றை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை கொழுக்கட்டையாக பிடிக்க வேண்டும். பிடித்து வைத்த கொழுக்கட்டை களை இட்லித் தட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும். 
 சத்தான சுவையான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி.
Tags: