பலாக்கொட்டை மாங்காய் அவியல் செய்வது எப்படி?





பலாக்கொட்டை மாங்காய் அவியல் செய்வது எப்படி?

பலாப்பழ கொட்டையில் உள்ள புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள் , சரும நோய்களைத் தடுக்கின்றன. இந்த கொட்டையில் உள்ள இரும்பு சத்து, இரத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 
பலாக்கொட்டை மாங்காய் அவியல்
இரத்த சோகை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. இதை புளிக்க்கொழம்பு மற்றும் சாம்பாரில் மாங்காய் மற்றும் முருங்கைக்காயுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

பொதுவாக இந்த கொட்டையை வேக வைத்து உண்ணலாம். வெந்த பிறகு கிழங்கின் சுவையைக் ஒத்து இருக்கும். இது கண்களுக்கு மிகவும் நல்லது.

பெரும்பாலும் பச்சை மாங்காய் ஊறுகாய் மற்றும் பச்சடி செய்ய பயன்படுத்தப்படும். இதன் சுவை புளிப்பு என்றாலும் இது உடலுக்கு பல நன்மைகள் தரும். 

மாங்காய் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மாங்காய் செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். 
பசியைத் தூண்டும். மாங்கொட்டையில் கால்சியம், மற்றும் கொழுப்பு சத்தும் இருக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. 

தேவையானவை :

பலாக்கொட்டை - 10 - 15

சின்ன வெங்காயம் - 5 - 7

பூண்டு - 5 பல்

மாங்காய் - பாதி

எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு 

தாளிக்க :

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய் வற்றல் - 2

பச்சை மிளகாய் - 4

மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு

அரைக்க : 

தேங்காய் துருவல் - அரை கப்

சீரகம் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

செய்முறை :

முதலில் பலாக்கொட்டையை தோல் நீக்கி நீளவாக்கில் 4 ஆக நறுக்கி வைக்கவும். மாங்காயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். 

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும். பலாக்கொட்டையில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். 

பலாக்கொட்டையை 5 - 10 நிமிடங்கள் வேக வைத்து, அத்துடன் மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். 
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நைசாக அரைத் தெடுக்கவும்.

வேகவைத்த மாங்காய் பலாக்கொட்டை கலவையில் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்புச் சேர்த்து கொதிக்க விடவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்த வற்றை தாளித்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

தாளித்து வதக்கிய கலவையை கொதிக்கும் மாங்காய் கலவையில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சுவையான பலாக்கொட்டை மாங்காய் அவியல் தயார்.
Tags: