️மாங்காயின் மருத்துவ குணங்கள் தெரியுமா?





️மாங்காயின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

மாங்காயின் அதனுடைய இலை, வேர், பூ, பட்டை என்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகமாகவே நிறைந்துள்ளன. ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
மாங்காயின் மருத்துவ குணம்
ஆனால் அந்த மாங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, தொண்டை கரகரப்பு, வயிற்றுவலி ,வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

எனவே நமது உடம்புக்கு நன்மை தரக்கூடிய எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதை அளவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மாம் பழத்தில் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. 
ஆனால் மாங்காய் கலோரிகள் இல்லை. எனவே இந்த மாங்காயை அதிக உடல் எடை கொண்டவர்கள் தினமும் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறைக்க முடியும்.

மாங்காய் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரக்கூடிய ஒன்று. அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் உடனே மாங்காய் சாப்பிடுவதால் விரைவில் குணமாகும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிகமான சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சினை களுக்கு மாங்காய் சாப்பிடுவதால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மாங்காயை உடலின் எனர்ஜியை அதிகரிக்கிறது. இந்த மாங்காய் நம்முடைய மதிய உணவிற்குப்பின் சாப்பிடுவதால் மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபட முடியும்.
மாங்காய் சாப்பிடுவதால் பித்தம் பித்தநீர் சுரப்பை அதிகரிப்பதோடு உடலில் ஏதேனும் பார்ட்டி தொற்றுகளில் இருந்து தொற்றுக்களை சரி செய்து உடலை சுத்தப் படுத்துகிறது. 
மலச்சிக்கல் பிரச்சனை
எனவே மாங்காயை கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாங்காயில் வைட்டமின் சி சத்துக்கள் நமது உடம்பில் ரத்த நாளங்களில் நீசத் தன்மையை அதிகரித்து. புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது. 

அதிக வெயிலால் ஏற்படும் பிரச்சினைகளையும் தடுக்க உதவுகிறது. மாங்காய் உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை உடனே நின்று விடும். 
அதே போல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும். மேலும் நல்ல பலன் கிடைக்கும்.

மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பற்கள் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்சினைகளை தடுக்கும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Tags: