மணத்தக்காளி காய் குழம்பு, காரக்குழம்பு செய்வது !





மணத்தக்காளி காய் குழம்பு, காரக்குழம்பு செய்வது !

மணத்தக்காளி கீரை வாங்கும் போது காய்களை பிரித்து எடுத்துக் கொள்ளவும்/வற்றலும் உபயோகிக்கலாம்.
தேவையானவை:

மணத்தக்காளி காய் : 1 கப்/ தேவையான அளவு

சாம்பார் வெங்காயம் : 8 (ஒன்று, இரண்டாக தட்டிக் கொள்ளவும்)

பூண்டு : 2

(முழுசாகவும், ஒன்று, இரண்டாகவும் தட்டிக் கொள்ளவும்).

தக்காளி : 3 சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

குழம்பு மசால் தூள் : 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் : 1 சிட்டிகை

புளி : 1 எலுமிச்சை அளவு

உப்பு : தேவைக்கேற்ப

தாளிதம் செய்ய :

2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்

வெந்தயம் : 1 தேக்கரண்டி

கடுகு : 2 தேக்கரண்டி

அல்லது : 1 கறி வடகம்

செய்முறை :
மணத்தக்காளி காய் குழம்பு, காரக்குழம்பு

பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டிய வெந்தயம், கடுகு / 1 கறி வடகம் சேர்த்து பொறிய விடவும், 

பின்னர் சாம்பார் வெங்காயம், பூண்டு சேர்க்கவும், நன்கு வதங்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி மூடி சிறிய தீயில் வைக்கவும். தக்காளி நன்கு வெந்ததும்
மசால் தூள், மஞ்சள் தூள், கழுவிய மணத்தக்காளி காய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து லேசாக கிளறவும், கரைத்த புளியை அதில் சேர்த்து கொதிக்க விடவும், 

எண்ணெய் வெளியறும் வரை வைக்கவும், இறக்கிய பின் சிறிது வறுத்து பொடி செய்த எள் / நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி சேர்க்கவும். சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.
Tags: