கோதுமை ஆப்பிள் அல்வா செய்வது எப்படி?





கோதுமை ஆப்பிள் அல்வா செய்வது எப்படி?

ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. 
கோதுமை ஆப்பிள் அல்வா செய்வது எப்படி?
மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இது டைகார்பாக்சிலிக் அமிலமாகும், இது திராட்சை, ஒயின் மற்றும் ருபார்ப் ஆகியவற்றிலும் உள்ளது. இது உணவுக்கு புளிப்புச் சுவையை அளிக்கிறது. 

ஆரஞ்சு சிட்ரிக் அமிலத்தின் இயற்கையான மூலமாகும். தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று கூறுவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 

இதில் சில உண்மைகளும் அடங்கி யுள்ளது. சுவை மிகுந்த ஆப்பிள் பழங்களை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. 

தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் கிடைக்கின்றன. 

ஆப்பிள் பழங்களை ஜூஸாகவோ பதப்படுத்தியோ சாப்பிடுவதற்குப் பதிலாக அப்படியே முழுதாக தோல் உரிக்காமல் சாப்பிடுவதுதான் சிறந்தது. ஆப்பிள் பழத்தின் தோலில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறம்பியுள்ளது. 

பொதுவாக பளிச்சென்ற நிறத்திலுள்ள சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் மற்றும் க்ரீன் டீ, சிவப்பு வைன் ஆகியவற்றில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமாக இருக்கும்.

கோதுமை ஆப்பிள் அல்வா ஒரு சிறந்த குழந்தை உணவு. ஆப்பிள் மற்றும் கோதுமைகளை உங்கள் குழந்தைக்கு தனித்தனியாக அறிமுகப் படுத்திய பிறகு, 8 மாதங்களில் இது குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
கோதுமை ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள்

ஆப்பிள் – இரண்டு (தோல் நீக்கி துருவி கொள்ளவும்)

கோதுமை மாவு – ஒரு கப்

நெய் – தேவையான அளவு

முந்திரி – பத்து நம்பர்

பால் – 35௦ மில்லி லிட்டர்

ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்

கலர் பவுடர் – சிறிதளவு

சர்க்கரை – 1௦௦ கிராம்
செய்முறை
கடாயில் நெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். 

பின், வறுத்த கோதுமை மாவை தண்ணீரில் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து துருவிய ஆப்பிள் சேர்த்து கிளறவும். 
பின், கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறவும். சர்க்கரை சேர்த்து கிண்டவும். பிறகு, நெய், கலர் பவுடர் சேர்த்து கிளறவும். 

இறுதியில், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கி விடவும்.
Tags: