ஸ்பைசி டைமன்டு பிஸ்கட் செய்வது எப்படி?





ஸ்பைசி டைமன்டு பிஸ்கட் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள். 
ஸ்பைசி டைமன்டு பிஸ்கேட்

பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். 

இந்த  டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. 

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். 

இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப் பட்டவையாகவும் இருக்கலாம். 

பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவதுதான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள்,  குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். 

இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க  வேண்டும். டயமண்ட் பிஸ்கட் ஒரு பிரபலமான தேநீர் நேரம் அல்லது குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி உணவு.

தேவையான பொருட்கள்
கடலை மாவு – அரை கப்

மைதா மாவு – ஒரு கப்

பச்சரிசி மாவு – ஒரு கப்

சீரகம் – அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு தேகரண்டி

உப்பு – தேவைகேற்ப

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

ஓமம் – ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்ளு – எட்டு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், ஓமம், வெள்ளை எள்ளு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக கலந்து 
சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, திக்காக திரட்டி, டைமன்டு வடிவில் சின்ன சின்னதாக வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
Tags: