செம்பருத்தி ஜூஸ் செய்வது எப்படி?





செம்பருத்தி ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

தண்ணீர் _ 1 லிட்டர்

நாட்டு செம்பருத்திப் _ பூ 50

சர்க்கரை (அ)வெல்லம் 250 _ 300கி

எலுமிச்சம் பழம் _ 2

செய்முறை
செம்பருத்தி ஜூஸ் செய்வது
தண்ணீரைக் கொதிக்க விடவும். அதில் காம்பு, மகரந்தம் நீக்கி சுத்தம் செய்து அலசிய செம்பருத்திப் பூவை சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும். 
ஐந்து நிமிடங்கள் கழித்து செம்பருத்தி இதழ்களை வடிகட்டி எடுத்து விடவும். சர்க்கரையை அரை தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விடவும். அழுக்கு நீக்கி வடிகட்டிய நீரில் சேர்த்துக் கலக்கவும். 

கடைசியாக எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும். நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து குடிக்கலாம். 
எவ்விதமான எஸ்சென்ஸோ, செயற்கை நிறமோ சேர்க்காத சுவையான ,உடலுக்கு குளிர்ச்சியான, கோடைக்கு ஏற்ற எளிமையான குளிர்பானம்.
Tags: