அத்தி மற்றும் நட்ஸ் லட்டு செய்வது எப்படி?





அத்தி மற்றும் நட்ஸ் லட்டு செய்வது எப்படி?

சக்தி மற்றும் ஆற்றலின் ஆதாரமாக விளங்கும் இந்த இனிப்பு லட்டு, பண்டிகை காலத்திற்கு மட்டும் ஏற்ற உணவுப்பொருள் அல்ல. 
அத்தி மற்றும் நட்ஸ் லட்டு
தினசரி உணவிலும் இந்த லட்டுவை சேர்த்துக் கொள்வதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும் மிகக் குறைந்த மூலப்பொருட்கள் கொண்டு எளிமையான முறையில் அதிக நேரம் செலவிடாமல் இந்த லட்டுவைத் தயாரிக்க முடியும்.
சிறந்த ஊட்டச்சத்து பெற உதவும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப் படுகிறது. 

இந்த இனிப்பில் தாவர புரதம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் இதன் சுவை அதிகரிப்பதோடு, இந்த இனிப்பு முழுமை அடைகிறது.

தேவையான பொருட்கள்

ஒரு கப் முந்திரி

ஒரு கப் பாதாம்(தோல் உரித்த பாதாம் கூட பயன்படுத்தலாம்)

ஒரு கப் தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை

அரை கப் பிஸ்தா

2 கப் கொட்டை நீக்கப்பட்ட பேரிச்சம்பழம்

ஒரு கப் அத்திப்பழம்

2 ஸ்பூன் ஆளி விதைகள்

ஒரு ஸ்பூன் எள்ளு (வெள்ளை அல்லது கருப்பு எள்ளு, எதை வேண்டு மானாலும் பயன்படுத்தலாம்)

ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள்

ஒரு சிட்டிகை குங்குமப்பூ

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
தேங்காய் தூள் அல்லது பாதாம் தூள் (அலங்கரிக்க)

அரை கப் சர்க்கரை அல்லாத இயற்கையான தாவர புரதம்

தண்ணீர் தேவைக்கேற்ப

செய்முறை
முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, ஆளிவிதைகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்.

சர்க்கரை அல்லாத தாவர புரத பவுடரை இந்த அரைத்த கலவையில் சேர்த்து ஒரு புறம் எடுத்து வைத்துக் கொள்ளவும் .

அடுத்தது, பேரிச்சை, மற்றும் அத்திப் பழத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

உலர் பழக் கலவையுடன் இந்த அத்திப்பழ பேரிச்சை விழுதை சேர்த்துக் கலந்து ஒரு மாவாக திரட்டிக் கொள்ளவும்.

இந்த மாவில், குங்குமப்பூ, எள்ளு, ஏலக்காய் தூள், ஆளி விதை போன்றவற்றை சேர்த்து கலக்கவும் மாவு மிகவும் அடர்த்தியாக இறுக்கமாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.

எல்லாம் முடிந்தவுடன் இந்த மாவில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் இப்போது லட்டு செய்ய மாவு தயார்.
கைகளில் ஒரு உருண்டைக்கு தேவையான மாவை எடுத்து நன்றாக லட்டு போல் உருட்டிக் கொள்ளவும் லட்டு உருண்டை தயாரானவுடன், பாதாம் அல்லது தேங்காய் தூளில் ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.

பின்பு அனைத்து லட்டுக்களும் தயாரானவுடன் 2-3 மணி நேரம் இந்த லட்டுவை பிரிட்ஜில் வைக்கவும் .
ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் உணவுகள்?
இதனால் லட்டு இறுக்கமாக மாறும் பின்பு 3 மணி நேரம் கழித்து உலர் பழம் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட லட்டுவை அனைவருக்கும் பரிமாறலாம்.
Tags: