சாக்லேட் தேங்காய் லட்டு செய்வது எப்படி?





சாக்லேட் தேங்காய் லட்டு செய்வது எப்படி?

வெறும் 5 பொருட்கள் கொண்டு இந்த இனிப்பை உருவாக்க முடியும் மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் இந்த இனிப்பை தயாரித்து அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். 
சாக்லேட் தேங்காய் லட்டு
இந்த இனிப்பிற்கு மேலும் சுவை சேர்க்கும் வகையில் கொக்கோ பவுடர் அலல்து சாக்லேட் ப்ளேவர் தாவர புரத பவுடர் சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்

2 கப் உலர் தேங்காய் துருவல்

4-5 ஏலக்காய் விதைகள்

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

அரை கப் முழு கொழுப்பு தேங்காய் பால்

2/3 கப் வெல்லம்

2 ஸ்பூன் தேங்காய் மாவு

அரை கப் சாக்லேட் தாவர புரத பவுடர்

ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை
ஒரு மிக்சியில், உலர்ந்த தேங்காய் துருவலை கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும் இந்த தேங்காய் தூளில், ஏலக்காயை நுணுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள் !
தேங்காய் பாலை சூடாக்கி, அதில் தேங்காய் எண்ணெய், வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும் இந்த கலவை கொதிக்கத் தொடங்கிய வுடன், நெருப்பைக் குறைத்து, அரை கம்பி பதத்திற்கு வேக வைக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து, அதில் தேங்காய் மாவு, தாவர புரத பவுடர், தேங்காய், ஏலக்காய் போன்ற வற்றை ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாகக் கலந்து லட்டு செய்ய ஏற்ற பதத்திற்கு கொண்டு வரவும்.

நன்றாக இந்த கலவை ஆறியவுடன் லட்டுவாக உருட்டவும் தேவைபட்டால், ஒவ்வொரு லட்டுவையும் தேங்காய் துருவலில் உருட்டி எடுக்கலாம்.
கெளுத்தி மீனின் மருத்துவ பயன்கள் !
இதனை உடனடியாக பரிமாறலாம் காற்று புகாத ஜாரில் வைத்து அடுத்த சில நாட்கள் சாப்பிடலாம்.
Tags: