பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி?





பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையானவை.:

பீட்ரூட், நெல்லிக்காய் – தலா ஒன்று

தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு (துருவவும்)

மிளகுத்தூள், உப்பு – சிறிதளவு. 

செய்முறை:
பீட்ரூட் ஜூஸ் செய்வது
பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி, பொடியாக நறுக்கவும். 
பீட்ரூட்டுடன் நெல்லிக்காய் துண்டுகள், இஞ்சித் துருவல், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும் .

(வடிகட்டும்போது சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம்.

குறிப்பு:

இதை அருந்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
Tags: