பெஸ்டோ செய்வது எப்படி?





பெஸ்டோ செய்வது எப்படி?

கோடை இறுதியில், அனைத்து துளசிகளும் வாடி போகும். அவ்வாறு வாடிய துளசிகளை வைத்து வீட்டிலேயே, பெஸ்டோ தயாரிக்க உபயோகிக்கலாம். 
பெஸ்டோ செய்வது
இது வழக்கமாக சாப்பிடும் பதார்த்தங்களில் இருந்து இதன் சுவை வித்தியாசபட்டு இருப்பதால், இதுவரைப் பிடித்த மற்ற உணவு வகைகளை வெல்லும் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

சரி, இதை எப்படி தயாரிப்பது என்று இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துளசி இலை - 2 கப்

ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்

இத்தாலிய சீஸ் - 1/4 கப்

பூண்டு - 10 பற்கள்

பைன் பருப்பு - சிறிது

உப்பு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

செய்முறை:

1. ஒரு பேக்கிங் தாளில், பைன் பருப்புகளை பரப்பி, அதனை தங்க பழுப்பு நிறம் அடைய, 5-10 நிமிடங்கள் வறுத்தோ அல்லது 400 டிகிரி சூட்டில் மைக்ரோவேவ்வில் சூடு செய்யவும்.

2. பூண்டு, சீஸ் மற்றும் பருப்புகளை சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.

3. பின்னர் அதனை அரைப்பானில் போட்டு, ஆலிவ் ஆயில் ஊற்றவும்.

4. அடுத்து 1/2 கப் துளசியை அரைப்பானில் சேர்த்து அரைக்கவும்.

5. சிறிது சிறிதாக துளசியை சேர்த்து, பின் உப்பு மற்றும் மிளகு சேர்த்து அரைக்கவும்.

6. ஆலிவ் எண்ணையை தேவையான அளவு ஊற்றி நன்கு மசிய செய்யவும்.
எச்சரிக்கைகள் :

* பைன் பருப்புகளை வறுக்கும் போது கவனமாக இருக்கவும். கவனிக்காவிடில் அது நிமிடத்தில் கருகி விடும். வறுக்கும் சமயம் ஒருவித சுவை மிக்க வாசனை வரும். அதன் மூலம் அது வறுக்கபட்டதை அறியலாம்.

* மிதமான மற்றும் இனிப்பான சுவை மணத்திற்கு, வறுக்கப்பட்ட பூண்டு பற்களை பயன்படுத்துவது நல்ல முயற்சி. முழு பூண்டுகளின் மேல் பகுதியை நீக்கி, 
பின் 350 டிகிரி வெப்பத்தில் 30-45 நிமிடங்கள், ஓவனில் ஒரு சில்வர் காகிதத்தில் வைத்து சூடு செய்தால், குறிப்பிட்ட நிமிடத்தில் நல்ல வாசனை வீடு முழுக்க வரும் பொழுது, அது நல்ல பதத்திற்கு வந்ததை அறியலாம்.

* பெஸ்டோ தயாரிக்க இது சிறந்த ஒரு வழிகாட்டி. சுவைகேற்ப ஆலிவ் எண்ணெய், பூண்டு, அல்லது சீஸ் ஆகியவற்றை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்து முயற்சி செய்யவும். 

மேலும் அக்ரூட் பருப்புகள் அல்லது வேறு பருப்புகள் பயன்படுத்தி முயற்சி செய்யவும்.
* பிரட், பிட்சா, பாஸ்தா, கோழி வறுவல் முதலியன இதனுடன் சேர்த்து சாப்பிட சிறப்பாக இருக்கும்.
* பைன் பருப்புககளுக்கு பதிலாக வறுத்த அக்ரூட் பருப்புகளை பயன்படுத்தலாம்.

* ஒரு பிரகாசமான ஆரோக்கியமான பச்சை நிற பெஸ்டோ செய்ய, துளசி இல்லையெனில் வேறு மூலிகைகளான அருகுளா அல்லது கொத்தமல்லி கொண்டு முயற்சி செய்யலாம்.
Tags: