எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மனிதனுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் தன்மை நெய்க்கு உள்ளது. மேலும் பலவகையான மருத்துவ குணங்களை (ghee benefits) கொண்டது இந்த நெய். சரி வீட்டில் நெய் செய்முறை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம்.
எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை

வீட்டிலேயே பாலாடை சேர்த்து நெய் தயாரிக்கும் முறை (How To Make Ghee) – 100% Original Taste

தேவைப்படும் பொருட்கள் (How To Make Ghee):

பால் ஆடை – 10 அல்லது 20 நாட்கள் சேர்த்து கொள்ளவும்.

உறை மோர் – சிறிதளவு

ஐஸ் க்யூப் – 10

முருங்கை கீரை – ஒரு கொத்து

நெய் செய்முறை – (How To Make Ghee)

நெய் செய்முறை பொறுத்தவரை நாம் தினமும் பால் காய்ச்சும் பொழுது, அதில்படியும் ஆடையை ஒரு டப்பாவில் போட்டு 10 அல்லது 20 நாட்கள் ஃபிரிட்ஜியில் சேர்த்து வரவும்.

ஓவ்வொரு நாளும் ஆடையை சேர்த்து தினமும் பாட்டிலில் போட்டு சேர்த்து வரவும். ஒரளவு பாலாடை சேர்ந்த பிறகு, அந்த பாலாடையில் கொஞ்சம் உறை மோரை ஊற்றி 5 மணி நேரம் வெளியே வைத்து உறைய வைக்க வேண்டும்.

5 மணி நேரம் முடிந்த பின்பு மீண்டும் ஃபிரிட்ஜியில் குளிர வைக்க வேண்டும். குளிர்ந்தவுடன் வெளியே எடுத்து ஐஸ்க்யூப் சேர்த்து மிக்ஸியில் ஐந்து நிமிடம் அடிக்க வேண்டும்.

இவ்வாறு மிக்ஸியில் அடித்தால் வெண்ணை தனியாக திரண்டு வரும் அதில் கிடைக்கும் மோர் கசக்காமல் இருந்தால் மோர் குழம்பு வைக்க பயன்படுத்தலாம்.
நெய் மிக்ஸியில் அடித்து தனியாக எடுத்த வெண்ணெயை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி எடுக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவி எடுத்த வெண்ணெயை போட்டு உருக்க வேண்டும்.

வெண்ணெய் உருகி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். வெண்ணெய் உருகி நெய் பதம் வந்ததும் ஒரு கொத்து முருங்கை கீரையை போடவும். முருங்கை கீரை பொறிந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்.

ஆறியவுடன் ஒரு பாட்டிலில் அந்த நெய்யை வடிகட்டி வைக்கவும். அதன் பிறகு இரண்டு நாள் கழித்து லேசாக உறைய ஆரம்பிக்கும்.

இந்த நெய் எலுமிச்சை நிறத்தில் பார்க்க அழகாகவும் மிகவும் மணமாகவும் இருக்கும். மிக சுவையாக வீட்டிலேயே தயாரிக்ககூடிய சுத்தமான நெய் ரெடி.

இந்த நெய்யை குழந்தைகளுக்கு சாதத்தில் விட்டு பிசைந்தும், பருப்புடனும், முட்டை பொரிக்கவும், பாயாசம், ஸ்வீட் என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
நெய்யை பாதுகாக்கும் முறை

நெய் செய்முறை (how to make ghee) பற்றி பார்த்தோம் அல்லவா, இப்போது நெய்யின் மருத்துவ பயன்கள் மற்றும் பாதுகாக்கும் முறைகளையும் இப்போது நாம் காண்போம்.

நெய்யை பாதுகாக்கும் முறை:

1. எப்போதும் நெய்யை நன்கு மூடி, சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும்.

2. நெய் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், குளிர்சாதன பெட்டியில் வைக்காதீர்கள்.

3. வெப்பமான காற்றில் திறந்தீர்கள் என்றால், நீரானது நெய்யுடன் சேர்ந்து கெட்டு விட வாய்ப்புள்ளது.

4. சுத்தமான கன்டெய்னரில், காற்று புகாதபடி அடைத்து வைத்தால், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை, நெய் கெடாமல் இருக்கும்.

5. நெய் கன்டெய்னரை திறக்காமல், குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
6. நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நெய், பல மாதங்கள் அறை வெப்ப நிலையில் கெடாமல் இருக்கும்.

7. நீண்ட நாள் பயன்பாட்டுக்கு, நெய்யை ஒளியே புகாத, கன்டெய்னரில் காற்று புகாதபடி, இறுக்கமாக மூடி, இருட்டான பகுதியில் பாதுகாத்து வைக்க வேண்டும்.

நெய் பயன்கள் (Ghee Benefits ):

நெய் மருத்துவ பயன்கள் (ghee benefits): தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

2. நெய் பயன்கள் (ghee benefits): உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

3. நெய் மருத்துவ பயன்கள் (ghee benefits): கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம்.
4. நெய் பயன்கள் (ghee benefits): வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்து விடும்.

5. நெய் மருத்துவ பயன்கள் (ghee benefits): நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.
நெய் பயன்கள்

6. நெய் பயன்கள் (ghee benefits): விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும். 
7. நெய் மருத்துவ பயன்கள் (ghee benefits): உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம்.

8. நெய் பயன்கள் (ghee benefits): நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

9. நெய் மருத்துவ பயன்கள் (ghee benefits): வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.
எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை ! எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on April 04, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚