கத்திரிக்காய் கார மசியல் செய்வது எப்படி?





கத்திரிக்காய் கார மசியல் செய்வது எப்படி?

வழக்கமான பொரியல், வறுவல் போல இல்லாமல் கத்தரிக்காய் கார மசியல் ஒரு தனி சுவையுடன் இருக்கும். 
கத்திரிக்காய் கார மசியல்
கத்திரிக்காய் வேண்டாமென்று சொல்பவர்கள் கூட கத்திரிக்காய் கார மசியலை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையானவை

கத்திரிக்காய் - 1ஃ2 கிலோ

பச்சை மிளகாய் - 6

வெங்காயம் - 2

தக்காளி - 1

பூண்டு - 12

சீரகம் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1ஃ4 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை
கத்திரிக்காயை அதன் தோல் பகுதி நிறம் மாறி பிரிந்து வரும் வரை நெருப்பில் வாட்டி எடுக்கவும். 

பிறகு கத்திரிக்காய் களை தண்ணீரில் போட்டு அதன் தோலினை பிரித்தெடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

ஒரு வானலியில் எண்ணெய் விட்டு சீரகம், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். 
இதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மற்றும் மசித்த கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும். மசித்த கத்திரிக்காய் நன்கு வெந்தவுடன் அடுப்பி லிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்
Tags: