சீரக ரைஸ் செய்வது எப்படி?





சீரக ரைஸ் செய்வது எப்படி?

தேவையானவை:

சாதம் - ஒரு கப்,

சீரகம் - 4 டீஸ்பூன்,

பூண்டு - 15 பல், சோம்பு, உளுத்தம் பருப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கடுகு - கால் டீஸ்பூன்,

நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சீரக ரைஸ்
பூண்டை தோல் உரித்து, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு... கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பிறகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, சீரகம், நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள் ஆகிய வற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் சாதம், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்
முதல் நாள் இரவே, கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தயார் செய்து கொண்டால், காலையில் சாதம் வடித்துக் கலந்தால், ஈஸியாக வேலை முடிந்து விடும்.
Tags: