கேரட் குருமா தயாரிப்பது எப்படி?





கேரட் குருமா தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்:
கேரட் - அரை கிலோ

தேங்காய் - 1 மூடி

பச்சைமிளகாய் - 5

கசகசா - 2 மேசைக் கரண்டி

இஞ்சி - ஒரு சிறியதுண்டு

பூண்டு - 10 பல்

வெங்காயம் - 2

தக்காளி - 100 கிராம்

சோம்பு - 1 மேசைக் கரண்டி

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 3
மஞ்சள் பொடி - சிறிதளவு

பிரிஞ்சி இலை - 1

எண்ணெய் - 4 மேசைக் கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
கேரட் குருமா தயாரிப்பது
கேரட்டை நீளவாக்கில் துண்டு களாக்கிக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாயையும் நீளநீளமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சிப்பூண்டு தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் தூவி சோம்போடு அரைக்கவும். பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகிய வற்றை லேசாகத் தட்டிக் கொள்ளவும்.

பேனில் எண்ணெய் விட்டு முதலில் பிரிஞ்சி இலையை இரண்டாகப் பிய்த்துப் போடவும். அடுத்து தட்டி வைத்துள்ள மசாலாப் பொடியைப் போடவும். 
அவை சிவந்து வரும் போது வெங்காயம் சேர்த்து வதக்கவும். இது சிவந்ததும் கீறிய பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி ஆகிய வற்றை சேர்த்து வதக்கவும்.

அடுத்து கேரட்டைப் போட்டு மேலும் வதக்கி தேங்காய் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து அரை கிண்ணம் தண்ணீர் விட்டு வேக விடவும். 

ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும். கடைசியாக இதனோடு கறிவேப்பிலை கொத்துமல்லி சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும். 

இதை சாதம், சப்பாத்தி, பரோட்டா, பூரி, இடியாப்பம், தோசை, நூடுல்ஸ் ஆகிய வற்றோடு பரிமாறவும்.
Tags: