கிரில் சிக்கன் பொடி செய்வது எப்படி?





கிரில் சிக்கன் பொடி செய்வது எப்படி?

கிரில் சிக்கனை ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவதைக் காட்டிலும் திருப்தியாக வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்துச் சாப்பிடலாம் . 
கிரில் சிக்கன் பொடி செய்வது
ஹோட்டல் ஸ்டைலில் அதன் ருசி இருக்க, இந்த கிரில் சிக்கன் பொடி ஒன்று போதும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சுவைக்கலாம். எவ்வாறு தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

காய்ந்த குடை மிளகாய் பொடி - 2 tsp

பச்சை மிளகாய் பொடி - 2 tsp

சீரகப் பொடி - 2 tsp

மஞ்சள் பொடி -2 tspகறி மசாலா பொடி - 2 tsp

பூண்டுப் பொடி - 2 tsp

ஏலக்காய் பொடி - 2 tsp

தனியா பொடி - 2 tsp

வெங்காயப் பொடி - 2 tsp

கடுகுப் பொடி - 1 tsp

சோம்புப் பொடி - 1 tsp

கரம் மசாலா - 1 tsp

உப்பு - தேவையான அளவு
மிளகுப் பொடி - ருசிக்கு ஏற்ப

இஞ்சிப் பொடி - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
செய்முறை :

மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொடிகளையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். 
பின் அவற்றைக் காற்றுப் புகாதா டப்பாவில் நிரப்பி வையுங்கள். வீட்டில் சிக்கன் சமைக்கும் போது இந்த பொடியைத் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்துச் சமையுங்கள்.
Tags: