முகத்தை பளிச்சிட செய்ய எலுமிச்சை தோலை தூக்கி எறியாதீங்க !





முகத்தை பளிச்சிட செய்ய எலுமிச்சை தோலை தூக்கி எறியாதீங்க !

எலுமிச்சையின் தோலை வெயிலில் காய வைத்து அதை அரைத்து பொடியாக வைத்துக் கொண்டால், 
முகத்தை பளிச்சிட
அவ்வபோது சில அழகுக் குறிப்புகளை செய்து முகத்தை பளிச்சிட செய்யலாம். அது எப்படி என பார்க்கலாம்..!
தயிர் :
தயிர்
எலுமிச்சை பவுடர் மற்றும் தயிர் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் சீராக அப்ளை செய்யுங்கள். இதனால் சூரியக் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.

கிரீன் டீ இலை :

எலுமிச்சை பவுடருடன் 1/4 ஸ்பூன் கிரீன் டீ இலை மற்றும் கொஞ்சம் தேன் கலந்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள். 
கிரீன் டீ இலை
அதை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது முகத்தை குளுர்ச்சியாக்கி எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பருக்களை அடியோடு நீக்கும்.
கடலை மாவு :
கடலை மாவு
கடலை மாவு மற்றும் எலுமிச்சை பவுடர் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவுங்கள். 

இதனால் எண்ணெய் சுரப்பது குறைந்து , டல்லான முகமும் டாலடிக்கும்.

சந்தனம் :
எலுமிச்சை பவுடர், சந்தனம் மற்றும் கற்றாழை சதை மூன்றையும் நன்கு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 
சந்தனம்
இந்த பேக் வறண்ட சருமத்தினர் செய்தால் ஈரப்பதம் கிடைத்து சருமம் மென்மையாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஒட்ஸ் பவுடர், எலுமிச்சை பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் மூன்றையும் கலந்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து ஃபேஸ் பேக்காக அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். 
ஓட்ஸ்
இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகளை நீக்கி சருமத்துகள் களுக்கு சுவாசம் கிடைக்கும். இதனால் சருமம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.
Tags: