ருசியான ஸ்வீட் கார்ன் கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?





ருசியான ஸ்வீட் கார்ன் கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. 
ருசியான ஸ்வீட் கார்ன் கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?
அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இனிப்பு சோளத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. 

இது இரத்தத்தை ஜெல் ஆக மாற்றுவதன் மூலம் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஸ்வீட் கார்னில் கரோட்டினாய்டுகள் மற்றும் பயோ ஃப்ளவனாய்டுகள் உள்ளன. 

அவை இரத்தத்தில் உள்ள கொழுப்பைப் பராமரிக்கின்றன. ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி புரதம், லிப்பிட், கார்போ ஹைட்ரேட், வளர்சிதை மாற்றம் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. 

ஸ்வீட் கார்னில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு. எனவே இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :
உதிர்த்த ஸ்வீட் கார்ன் - அரை கப்

கோதுமை ரவை - 1 கப்

தயிர் - 1 கப்

முந்திரி பருப்பு - 5

ப.மிளகாய் - 1

கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு

கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன்

இஞ்சி - 1 துண்டு

எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
ருசியான ஸ்வீட் கார்ன் கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி?
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்சியில் சுவீட் கார்னை கொட்டி கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை ஆகிய வற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும். 

பின்னர் இதில் கோதுமை ரவையை கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் சுவீட்கார்ன், தயிர், உப்பு ஆகிய வற்றை ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கிளறி 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். ருசியான சுவீட்கார்ன் இட்லி ரெடி.
Tags: