இதயநோய் பாதிப்பின் அளவை குறைக்கும் டார்க் சாக்லெட் !





இதயநோய் பாதிப்பின் அளவை குறைக்கும் டார்க் சாக்லெட் !

நல்ல விஷயம் சொல்லியிருக்கே உனக்கு சாக்லெட் கொடுக்கணும் என்று யாராவது சொன்னால் விடாமல் பிடித்து கறுப்பு சாக்லெட் வாங்கி சாப் பிடுங்கள். ஆரோக்யமாக இருப்பீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 
டார்க் சாக்லெட்

சாக்லெட் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? சாக்லெட் 30 வருடங்களுக்கு முன்பு சாக்லெட் என்றால் ஒரு இனிப்பு மிட்டாய் அவ்வளவே. இப்போது அப்படி யெல்லாம் சொல்லிவிட முடியாது. 

வகை வகையாய் ரகரகமாய் கண்ணுக்கு கவர்ச்சியாய் வலம் வருகிறது. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இனிப்பு நிறைந்த சாக்லெட் இல்லாமல் முடிவடைவதில்லை. 
இப்போது சாக்லெட் இல்லாத கொண்டாட்டங்களே இல்லை. ஏன் சாக்லெட் சாப்பிடுவதற் காகவே குழந்தைகள் கொண்டாட் டங்களை உருவாக்கி கொள்கிறார்கள்.

சாக்லெட் விலைஅதிகமுள்ள பொருள் அல்ல என்பதால் அனைவருக்கும் பிடித்தமான பொருளாக இருக் கிறது. குழந்தைகளிடம் அழகாய் காரியம் சாதிக்க அவ்வப்போது கைகொடுப்பது சாக்லெட்வகைகள் தான். 

ஆனால் சாக்லெட் உடலுக்கு கெடுதி, பற்களைச் சொத்தையாக்கும், அதிக இனிப்பு நிறைந்தது என்று அறவே ஒதுக்கி விடுபவர்களும் நம்மில் உண்டு. 

ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்த ஆய்வு முடிவு அல்வாவைப் போல் இனிப்பாக இருக்கும். 

சோர்வோடு இருக்கும் போது ஒரு சாக்லெட்டை பிரித்து வாயில் போட்டுக் கொண்டால் கிடைக்கும் புத்துணர்வில் வானத்தையே வளைத்து விடலாம். 
இதய நோய் பாதிப்பின் அளவைக் குறைக்கும்

அப்படியா என்று சாக்லெட் கடைகளைத் தேடி ஓடாதீர்கள் இவையெல்லாம் டார்க் சாக்லெட்களுக்கு மட்டுமே பொருந்தும். இவை சற்றே கசப்பு சுவையைக் கொண்டது.

சார்க் சாக்லெட் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைக்க டார்க் சாக்லெட் உதவுவதாக கண்டறிந்திருக்கி றார்கள். 

கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில் எபிகேடசின் என்னும் பொருள் டார்க் சாக்லெட்டில் இருப்பதாகவும் இவை முதியவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் என்னும் பிரச்னைக்கு தீர்வாக இருப்பதாக கூறுகிறார்கள்.

டார்க் சாக்லெட்டை ஒரு கடி கடித்தால் 150 அடி நடைப்பயணத்தை சோர்வின்றி தரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மன அழுத்தத்தை ஓரங்கட்ட வும், புற்றுநோய் எதிர்ப்புக்கும் டார்க் சாக்லெட் சிறந்த தீர்வாக இருக்கிறது. 
கர்ப்பக் காலத்தில் பெண்கள் அதிக இனிப்புகளைச் சாப்பிடக்கூடாது என்று வலியுறுத்தும் மருத்துவர்களே கூட டார்க் சாக்லெட்டை சாப்பிடலாம் என்கிறார்கள். 

மாதம் மூன்று சாக்லெட்கள் சாப்பிட்டால் இதய நோய் பாதிப்பின் அளவைக் குறைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். டார்க் சாக்லெட்டில் கொகோ இருக்கிறது. 

இதில் இயற்கையாக கலந்திருக் கும் மூலப்பொருள்கள் இரத்த குழாய்களின் ஆரோக்யத்தை அதிகரிக்கிறது. உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்யும் பிளவோனாய்டுகள் டார்க் சாக்லெட்டில் இருக்கிறது. 
இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது

இதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இண்டெக்ஸ் இருப்பதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. 

இதனால் நீரிழிவு கட்டுக் குள் வைக்கப்படுகிறது. இதயத்துக்கு ஆரோக்யம் அளிக்கும் பொட்டாசியம், காப்பர் சத்துகள் நிறைந்திருக்கிறது. 

இரும்புச்சத்து குறைப்பாட்டை போக்கும் அளவுக்கு இரும்புச்சத்து, மெக்னீஷியம் சத்து கொண்டிருக்கிறது. இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கி றது.
சாக்லெட் பற்றி இன்னும் இன்னும் இனிக்க இனிக்க பேசலாம். அதனால் சாக்லெட்டை அதிகம் சாப்பிடுவதில் தவறில்லை. 

ஆனால் இதில் 75 சத வீதம் அளவுக்கு கோகோ நிறைந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சாக்லெட் விரும்பி ஆய்வாளர்கள். 

இனி கறுப்பு நிற சாக்லெட்டை மட்டுமே குழந்தைகளுக்குப் பழக்குங்கள். நீங்களும் தவறாமல் சாப்பிடுங்கள்…
Tags: