வெண்டைக்காய் சாப்ஸ் செய்வது எப்படி?





வெண்டைக்காய் சாப்ஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:

வெண்டைக்காய் – அரை கிலோ,

கடலை மாவு – ஒரு கப்,

அரிசி மாவு – ஒரு கப்,

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை.:
வெண்டைக்காய் சாப்ஸ்
வெண்டைக்காயைக் கழுவி நன்றாகத் துடைத்து குறுக்குவாட்டில் நறுக்கி நிழலில் காய வைத்து எடுக்கவும். 

இத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து சூடானதும் வெண்டைக்காய் கலவையை எடுத்து உதிர் உதிராகப் போட்டு, கொரகொரப்பாகப் பொரித்தெடுக்கவும்.
Tags: