மீன் முட்டை பிரை செய்வது எப்படி?





மீன் முட்டை பிரை செய்வது எப்படி?

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. 
மீன் முட்டை பிரை
மற்ற உணவுகளை போல் இல்லாமல் கொழுப்பு வகை மீன்களான சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. 

முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது.
தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப் படுகிறது. 

கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம். 

மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :
மீன் முட்டை – 200 கிராம்

வெங்காயம் – 1

ப.மிளகாய் – 2

கடுகு – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

இஞ்சி – சிறிய துண்டு

தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.

மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும். அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும். சூப்பரான மீன் முட்டை பிரை ரெடி.
Tags: