உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?





உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?

உணவு எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாதவை. உணவு எல்லா உயிர்களுக்களுக்கும் நிறைஊட்டங்களை கொடுக்கிறது. உழவு இல்லை எனில் உணவு இல்லை, 
உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?
உணவு இல்லை எனில் உயிர்கள் இல்லை, உயிர் இல்லை என்றால் எதற்கு இந்த உலகு.

ஒருவர் தனது வாழ்நாளில் மூன்றுவேலை உணவுவையும் எந்தவித தடங்களும் இன்று உண்பார் எனில் அவர் இந்த உலகில் பணக்காரர்கள் என்று சொல்கிறது ஒரு தரவு,

இரண்டு வேளை உணவு, ஒருவேளை உணவுகூட கிடைக்கப்படாதவர்கள் ஏழை என்று கூறுகிறது இன்னும் ஓர் தரவு. இப்படி பார்த்தால் எம் நாட்டில் எத்தனை ஏழைகள் வாழ்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

இந்த உலகில் வருங்காலங்களில் உணவு கிடைப்பது கடினமானது என்று கூறுகிறார்கள். இதனால் பூச்சிகளை, வண்டுகளை, புழுக்களை, உண்ணப் பழகிக் கொள்கிறார்கள் வெளிநாட்டவர்கள்.
ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !
இது உடலுக்குத் தேவையான கார்போ ஹட்ரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர் ஊட்டம், தாதுக்கள் போன்ற தேவையான நிறை ஊட்டங்களை உடலுக்கு தருவதாக கூறுகிறார்கள்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் உணவின் பெருமையை அனைவரும் அறிவார்கள் என நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட உணவை எவ்வாறு வீணாக்காமல் பார்த்துக் கொள்வது என்று பார்ப்போம்.

தேவைக்கு மிகுதியான உணவு
தேவைக்கு மிகுதியான உணவு
தேவைக்கு மிகுதியான உணவு வகைகளை சமைக்காதீர்கள், தேவை உணர்ந்து உணவு வகைகளை சமையுங்கள்.

உணவங்களிலோ, வீட்டிலோ அல்லது திருவிழாக்கள், வீட்டு நிகழ்வுகளில் நடைபெறும் விருந்தில் தேவைக்கு மிகுதியான உணவை எடுக்காதீர்கள்.

அப்படி நீங்கள் உண்ட பின்னர் உணவு மிஞ்சினால், கூச்சப்படாமல் ஒரு பையை எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்று தேவைப்படும் போது உண்ணுங்கள் அல்லது உணவைத்தேடி அலையும் உயிரினங்களுக்கு கொடுத்து விடுங்கள்.

வெளிநாடுகளில் 
வெளிநாடுகளில்
ஒரு சில வெளிநாடுகளில் சட்ட ஒழுங்கள் உண்டு. உணவங்களில் தேவைக்கு மிகுதியாக உணவுகளை எடுத்து விட்டு அதை உண்ணாமல் விட்டால் அதற்கும் கட்டனம் செலுத்த வேண்டும். இதை நாமும் பின்பற்ற வேண்டும்.

பழைய சோறும் குழம்பும்
பழைய சோறும் குழம்பும்
அந்தக் காலத்தில் மீதமாகும் சோற்றை தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். குழம்பை சூடாக்கி வைப்பார்கள். அந்தப் பழைய சோறும் குழம்பும் அடுத்த நாள் காலை உணவாக்கி உண்பார்கள். 

உணவின் அருமையை உணர்ந்தவர்கள் செய்த காரியம் அது! இதை இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வெளியூர்களில் இருந்து உணவு 
வெளியூர்களில் இருந்து உணவு
நாம் வெளியூர்களில் இருந்து உணவை வரவழைத்து உண்பதை தவிர்க்க வேண்டும். இது உணவை மிகுதியாக வீணடிக்கிறது. இதை தவிர்த்து உள்ளூரில் கிடைக்கும் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

அதை ஊக்கப்படுத்த வேண்டும். அது நம் உள்ளூர் உழவர்களுக்கு கை கொடுத்ததாகவும் இருக்கும். நியூசிலாந்தில் இருந்து வரும் ஓர் குமளிப்பழம், அமெரிக்காவில் இருந்து வரும் தோடம்பழம் வாங்கி உண்ணலாம்.

ஆனால், அது தேவையா? அந்த நாட்டில் இருந்து இங்கே நுகர்வோரிடம் வந்து சேருவதற்கு போக்குவரத்து, பாதுகாப்பு வசதி என்று ஏகப்பட்ட வேலைகளை, முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டி யிருக்கிறது.

உணவைப் பதப்படுத்திப் பாதுகாக்க குளிர்சாதன வசதி தேவைப்படும். போக்குவரத்தில் எரிபொருள் வீணாகும்.
இவை யெல்லாம் சுற்றுச்சூழலை பாதிப்பவை. அதனால் தான் உள்ளூரில் விளையும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறோம்.

வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியான பிறகு சரியான முறையில் பாதுகாக்கப் படுவதில்லை. அதனாலேயே நிறைய உணவு வீணாகிறது.

எலிகளால் வீணாகிறது
எலிகளால் வீணாகிறது
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் இருபது விழுக்காடு எலிகளாலும், விநியோகம் செய்யப்படாமல் சேமிப்புக் கிடங்கில் கிடந்தே பாழாகியும் வீணாகிறது.

இதைத் தடுத்து உணவை சேமிக்கத் தொடங்கினால் ஆற்றல் சேமிக்கப்படும். ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையில் தவிக்கும் நமக்கு கரி மிச்சமாகும். நெகிழிப்பை போன்றவற்றைப் பயன்படுத்தும் தேவை குறையும்.

உரம், பூச்சிக்கொல்லி
உரம், பூச்சிக்கொல்லி
அடுத்து உணவு உற்பத்தியில் முதன்மையை கவனிக்க வேண்டியது வேதியல். உழவில் உரம், பூச்சி கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது பல்லுயிர்களுக்கு [Bio Diversity] கேடானது. 

இவற்றைப் பயன்படுத்துவதற்கு பதிலாக கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை விளைவிக்கலாம்.

மிகுதியான தண்ணீர் செலவாகாது. சான்றாக ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். சிறுதானியங்களுக்கு 5லிருந்து 10 லிட்டர் தண்ணீர் தான் செலவாகும்.

இதற்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் இல்லை.

உணவு 
உணவு
ஒரு பக்கம் உணவுப்பொருள் வீணாவது, அதனால் சுற்றுப்புறச்சூழல் கெட்டு, மக்களும் பாதிப்படைவது… இவற்றை யெல்லாம் தடுக்க வேண்டும் என்பது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நோக்கம்.

நமக்கு உணவு தேவை எனில், நாம் பழைய முறைகளை பினபற்ற வேண்டும் என்பது என்யோசனை. நாம் தேவைக்கு மேல் உண்ணும் உணவு அனைத்தும் அடுத்து வருக்குறியது என்ற எண்ணம் எம்முள்ளே எப்பொழுதும் தோன்ற வேண்டும்.

இறுதியாக,

பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு புலவரின் மனைவி இறக்கும் தருவாயில் தன் "கணவனை" அருகே அழைத்தாராம்.
உணவு வீணாவதை தவிர்க்க?
என்னவென்று கேட்டு, கலங்கிய கண்களோடு கணவன் அவள் பக்கத்தில் வர "மனைவி" தயக்கத்துடன் இப்படிக் கேட்டாளாம்.

“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும் ஆனால் ஒரே ஒரு கேள்வி என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு, என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது

அந்தக் கேள்வியை இதுவரை உங்களிடம் நான் கேட்டதில்லை இப்போதாவது கேட்கலாமா..?”
புலவனான அந்தக் கணவன் , புரியாமல் அந்தப் புனிதவதியைப் பார்க்க அந்த மனைவி கேட்டாளாம் இப்படி

“இதுவரை உங்களிடம் நான் கேட்காத அந்தக் கேள்விக்கு, இப்போதாவது பதில் எனக்குத் தெரிந்து விட்டால் நிம்மதியாக கண்களை மூடுவேன் அந்த நிம்மதியான மரணத்தை எனக்குத் தருவீர்களா.?”

கணவன் எதுவும் பேசாமல் தலையசைத்து விருப்பத்தை தெரிவிக்க மனைவி தன் நெடுநாள் ஐயத்தை கேட்டு விட்டாளாம்,

“ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு அருந்தும்போது ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி , அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் உண்பிர்கள் அப்படித்தானே..?”

கணவன் இதற்கும் பேசமால் தலையசைக்க , மனைவி கேட்டாளாம் “இதுவரை அதற்கான காரணத்தை ஒரு போதும் நான் உங்களிடம் கேட்டதில்லை காரணம் கணவன் சொன்னதற்கு மறுபேச்சு பேசி ,

நான் அறிந்த தில்லை இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக்கிறேன் இப்போதாவது சொல்லுங்கள் அந்த கொட்டங்கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”

இதைக் கேட்டு விட்டு, இதற்கான விடையை எதிர் பார்த்து அந்த மனைவி , புலவனான கணவன் முகத்தைப் புரியாமல் பார்த்திருக்க, அந்தக் கணவன் சொன்னாராம்
திருவள்ளுவர்
அது வேறொன்றும் இல்லை பரிமாறும் போது தவறுதலாக சோற்றுப் பருக்கை கீழே சிந்தி விட்டால் ,

அதை அந்த ஊசியில் குத்தி, கொட்டாங் குச்சியில் உள்ள தண்ணீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணத்தான் அந்தக் "கொட்டங்கச்சி நீரும், ஊசியும்”

கணவன் விடையை சொல்லியும் மனைவியின் குழப்பம் தீரவில்லை அவள் கேட்டாள் “ஆனால், ஒருபோதும் நீங்கள் அந்த ஊசியையும், கொட்டாங்கச்சியையும் பயன்படுத்தி நான் பார்த்ததே இல்லையே..?”

மனைவி இப்படிக் கேட்டதும் குரல் உடைந்து போன கணவன் குமுறும் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாராம் உண்மை தான் ஒரு நாளும் நான் அதைப் பயன்படுத்தவில்லை.

ஏனென்றால், ஒரு நாளும் நீ எனக்குப் பரிமாறும்போது ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தவே இல்லையே.

கணவன் விடையை அறிந்த மனைவி புன்னகை செய்தாளாம் அவ்வளவுதான் கண் மூடி "விட்டாளாம்"

நெகிழ்ச்சியோடு நெடு நேரம் நின்ற கணவன் அந்தப் புலவன் கண்ணீரோடு தன் அன்பு மனைவிக்காக உடனே ஒரு கவிதை எழுதினானாம்

இதுநாள் வரை தன் வாழ்நாளில் அவன் எழுதியதெல்லாம் இரண்டு வரிப் பாடல்கள் அதில் ஏழே ஏழு வார்த்தைகள் அவ்வளவுதான் அதுதான் அந்தப் புலவன் தன் பாட்டுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதி.
இப்போது தனது செய்யுள் விதியை தானே தளர்த்திக் கொண்ட அந்தப் புலவன் தன் வாழ்வில் முதன் முதலாக , நாலு வரிப் பாட்டு ஒன்றை எழுதினானாம் அந்த நாலு வரிப் பாடல்:

“அடியிற்கினியாளே அன்புடையாளே

படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-

இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”

ஆம் இந்த நாலு வரிப் பாடலை எழுதிய அந்தப்புலவர் "திருவள்ளுவர்"

கணவன் சொல் தட்டாத அந்த கள்ளமற்ற அன்பு மனைவி "வாசுகி"

அந்தப் பாடலின் பொருள் :

“அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!”
Tags: