3 வகை சிறுதானிய இட்லி செய்வது எப்படி?





3 வகை சிறுதானிய இட்லி செய்வது எப்படி?

சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். 
3 வகை சிறுதானிய இட்லி செய்வது
இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. 

அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும் போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது. 

திணையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும். கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. திணைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும்.  விரைவில் செரிமானமாகும். 

இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு - 2 கப்

கம்பு - 2 கப்

குதிரைவாலி - 1 கப்

உளுந்து - 1 கப்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி அரிசி மூன்றையும் நன்றாக கழுவி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும். அரைத்த 2 மணி நேரத்தில் இட்லி ஊற்றலாம். சுவையாக இருக்கும். 
Tags: