சுவையான இலங்கை ரொட்டி செய்வது எப்படி?





சுவையான இலங்கை ரொட்டி செய்வது எப்படி?

0
சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதா என்பது நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.  
சுவையான இலங்கை ரொட்டி செய்வது எப்படி?
நமக்கு பிடித்த பல்வேறு உணவுகளான பூரி, சமோசா, கேக்குகள் மற்றும் பிரவுனிகள் போன்ற அனைத்திலும் மைதா ஹான் பெரும் பங்கை வகிக்கிறது. 

கோதுமையில் இருந்து வந்தாலும் அதிகம் சுத்திகரிக்கப் படுவதால் இதில் உள்ள நார் சத்துகள் பெரும்பாலும் நீக்கப்படுகிறது. அட்டா எனப்படும் நார்ச்சத்துடன் கூடிய கோதுமை மாவு மைதாவுக்கு சிறந்த மாற்றுகளில் ஒன்றாகும். 

கோதுமை மாவு குறைவான செயலாக்கத்திற்கு உட்படுவதால், அனைத்து அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 

அது மட்டும் இல்லாமல்  இது உங்கள் எடை இழப்புக்கும் உதவியாக இருக்கும். மைதாவுக்கு மற்றொரு சிறந்த மாற்று கொண்டைக்கடலை (பெசன்) மாவு. 

கொண்டைக் கடலையில் இருந்து தயாரிக்கப்படும் இதில் அதிக புரதம் உள்ளது மற்றும் முழுமை உணர்வை ஊக்குவிக்க உதவுகிறது. எடை இழக்க முயற்சிக்கும் போது புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். 

மேலும் கொண்டைக்கடலை மாவு அதை மிகுதியாக வழங்குகிறது. சீலா, டோக்லா மற்றும் பல சுவையான உணவுகளை தயாரிக்க இதைப் பயன்படுத்தலாம்.
ரொட்டி மாவை பெரும்பாலும் பிரெட் மாவு என்றே குறிப்பிடுகின்றனர். பேக் செய்யப்படும் அனைத்து வகை உணவுப் பொருட்களுக்கும், அதன் அவுட்டர் லேயரில் ஒரு மாவுப் பொருள் இடம் பெற்றிருக்கும்.

பெரும்பாலும் இதற்கு மைதா மாவு பயன்படுத்தப் படுகிறது. அறிவியல் ரீதியாக சரியான அளவுகோல் மற்றும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே பேக்கிங் என்பது சிறப்பாக வரும். 

சரி இனி மைதா மாவு மற்றும் கோதுமை மாவு கொண்டு இலங்கை ரொட்டி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை: 

மைதா மாவு – அரை கப், 

கோதுமை மாவு – அரை கப், 

பச்சை மிளகாய் – ஒன்று, 

தேங்காய்த் துருவல் – அரை கப், 

தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 
செய்முறை: 
சுவையான இலங்கை ரொட்டி செய்வது எப்படி?
பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மைதா மாவு, பச்சை மிளகாய். உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். 
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கனமாக தட்டி, சூடான தோசைக் கல்லில் போடவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கம். இப்போது சுவையான இலங்கை ரொட்டி ரெடி.இதை சைட் டிஷ் உடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)