மிக்ஸ்டு பருப்பு இட்லி செய்வது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இட்லியை பலவிதமான வகைகளில் செய்யலாம். இன்று 4 வகையான பருப்பை வைத்து சுவையான சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மிக்ஸ்டு பருப்பு இட்லி
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா அரை,

அரிசி – கால் கப்

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு – சிறிதளவு.

தாளிக்க:

நெய் – ஒரு டீஸ்பூன்,

கடுகு, பெருங்காயத் துள் – தலா அரை டீஸ்பூன்,

நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு,

பச்சை மிளகாய் – 3,

எண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி முக்கால் மணி நேரம் ஊற விட்டு… 
உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைத்து கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள வற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
மாவை புளிக்க விடக்கூடாது. மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுக்கவும். 

சூப்பரான சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி ரெடி இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚