A இரத்த பிரிவினரை குறி வைக்கும் கொரோனா... O பிரிவுக்கு விலக்கு உண்மை என்ன?





A இரத்த பிரிவினரை குறி வைக்கும் கொரோனா... O பிரிவுக்கு விலக்கு உண்மை என்ன?

உலகெங்கிலும் அனைத்து நாடுகளிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 
A இரத்தப்பிரிவினரை குறி வைக்கும் கொரோனா...

இந்த கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சீனாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், டைப் ஏ இரத்தப் பிரிவினர் கொரோனா வைரஸால் அதிகம் தாக்கப் படுவதாகவும், டைப் O இரத்த பிரிவினரின் உடல் கொரோனா வைரஸை நன்கு எதிர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 
உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வரும் இந்நேரத்தில், இந்த வைரஸ் குறித்த சிறு சிறு கண்டுபிடிப்புக்களும் மிகவும் முக்கியமானவை.

2,173 நோயாளிகள்
நோயாளிகள்

சீனாவின் வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய மூன்று மருத்துவ மனைகளில் இருந்து உறுதிப் படுத்தப்பட்ட SARS-CoV-2 பரிசோதனையுடன், COVID-19 உள்ள 2,173 நோயாளிகளின் இரத்தக் பிரிவுகளை இந்த ஆய்வு ஆராய்ந்தது.

இந்த ஆய்வு சீனாவின் வுஹான் ஜின்யின்டன் மருத்துவ மனையில் இருந்து 206 இறந்த வழக்குகள் உட்பட, மொத்தம் 1,775 கொரோனா வைரஸ் நோயாளிகளையும், 

வுஹான் பல்கலை கழகத்தின் ரென்மின் மருத்துவமனை மற்றும் ஷென்சென் மருத்துவ மனையில் இருந்த 113 மற்றும் 285 கொரோனா நோயாளி களையும் கொண்டு கூறுகிறது.

இரத்தப் பிரிவுகள்

மேலும் இந்த ஆய்வு, வுஹானில் 3694 சாதாரண மக்களில் ABO இரத்தப்பிரிவு முறையே A, B, AB மற்றும் O ஆகியவற்றுக்கு 32.16%, 24.90%, 9.10% மற்றும் 33.84% விநியோகத்தைக் காட்டியது.
வுஹான் ஜின்யின்டன் மருத்துவ மனையைச் சேர்ந்த 1775 COVID-19 நோயாளிகளில் உள்ள A, B, AB மற்றும் O இரத்தப்பிரிவுகளில் 37.75%, 26.42%, 10.03% மற்றும் 25.80% இருப்பதாக கூறுகிறது. 

இந்த கணக்கெடுப்பைப் பார்க்கும் போது, அதில் A வகை இரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸால் அதிகம் தாக்கப் பட்டிருப்பதும், O வகை இரத்தப்பிரிவினருக்கு குறைவாக இருப்பதும் தெரிய வந்தது.

ஆய்வு முடிவு
இரத்தப் பிரிவுகள்

இந்த ஆய்வின் முடிவில், A வகை இரத்த பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அபாயம் அதிகம் இருப்பதும், O வகை இரத்த பிரிவினருக்கு இந்த தொற்றின் அபாயம் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இரத்த வகைகளும்... தொற்றுக்களும்...

இரத்த வகைகளில் உள்ள ஆன்டிஜென் வெளிப்பாட்டில் உள்ள வேறுபாடுகள் தான் பல நோய்த்தொற்று களை அதிகரிக்கவோ அல்லது அதன் அபாயத்தை குறைக்கவோ காரணமாக உள்ளது. 
நுண்ணுயிரிகள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றிற் கான ஏற்பிகளாக அல்லது மைய ஏற்பிகளாக செயல்படுவதன் மூலம் இரத்தப் பிரிவுகள் தொற்று நோய்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆய்வு தேவை
இரத்த வகைகளும், தொற்றுக்களும்

சீனாவின் ஆராய்ச்சி யாளர்கள் தலைமை யிலான ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட வில்லை மற்றும் இது ஒரு ஆரம்ப ஆராய்ச்சி என்பதால், இதற்கு மேலும் ஆய்வு தேவையாக உள்ளது. 

அதோடு இந்த ஆய்வைக் கொண்டு, O வகை இரத்தப்பிரிவினர் முற்றிலும் பாதுகாப்பானவர்கள் என்று உறுதியாக கூற முடியாது. 
எனவே உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைத்தப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.... boldsky
Tags: