Recent Posts


காளான் கிரீம் சூப் செய்வது எப்படி?

Subscribe Via Email

தேவையானவை :
காளான் – ஒரு பாக்கெட்,

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),

நறுக்கிய பூண்டு – 2 பல்,

பிரிஞ்சி இலை – ஒன்று,

தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – சிறிதளவு,

வெள்ளை மிளகுத் தூள் – காரத்துக்கேற்ப,

வொயிட் சாஸ் – 100 மில்லி,

வெண்ணெய் – உப்பு – தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு :

வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,

மைதா – 3 டேபிள் ஸ்பூன்,

பால் – அரை லிட்டர்,

உப்பு – சிறிதளவு.

செய்முறை :
காளான் கிரீம் சூப்
அடி கனமான கடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டி யில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 

இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால்… வொயிட் சாஸ் ரெடி.
வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். 

நன்கு வதங்கும் போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்… வொயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close