இறால் நெய் ரோஸ்ட் செய்முறை | Shrimp Ghee Roast Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருட்கள்:
1. இறால் – 1/2 கிலோ

2. நெய் – 1/4 கப்

3 .பெரிய வெங்காயம் – 1 (சிறிதாக வெட்டி வைக்கவும்)

4. காஷ்மீரி மிளகாய் – 5 (நல்ல மணம் & நிறம் கொடுக்கும், காரம் அதிகம் இருக்காது )

5. வரமிளகாய் – 4 அ 5

6. வரமல்லி – 1 தேக்கரண்டி

7. மிளகு – 1 தேக்கரண்டி

8. சீரகம் – 1 தேக்கரண்டி

9. சோம்பு – 1 தேக்கரண்டி

10. இஞ்சி – 1 இன்ச்

11. பூண்டு – 5 பெரிய பல்

12. எலுமிச்சைச்சாறு – 1 மேசைக் கரண்டி

13. தயிர் – 1/4 கப்

14. கறிவேப்பிலை – 2 கொத்து

15. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்

16. இந்துப்பு – தேவையான அளவு

செய்முறை:
இறால் நெய் ரோஸ்ட் செய்முறை
4 முதல் 9 வரை உள்ள பொருட்களை கடாயில் மிதமான அடுப்பில் தனித்தனி யாக வறுத்து

மிக்சி ஜாரில் போட்டு 10, 11 மற்றும் 12 ஐ சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் ஒரு கடாயில் இறால், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து,

இறாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை ஓட்டி விட்டு (5 to 8 நிமிடம்) தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் நெய் 1/4 கப் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதங்கிய பின் அரைத்து வைத்த மசாலா மற்றும் 

தயிர் சேர்த்து கலக்கி விட்டு மசாலா கலர் நிறம் டார்க் ஆக மாறும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் ஓட்டி விடவும் (8 to 10 நிமிடம் ஆகும்). 

அதன் பின் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் ஓட்டி விட்டு வேக வைத்த இறாலை சேர்த்து கலக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 to 8 நிமிடம் நல்லா பிரட்டி விட்டு ட்ரை ஆக வந்த பின் இறக்கி வைக்கவும்.

ஷ்ஷ்ஷ் அப்பா! அப்படியே மசாலா மணக்க அலாதி சுவையான “இறால் நெய் ரோஸ்ட்” கொழுப்பில் மிதக்க உள்ளே அள்ளிப் போட தயார்!

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚