புற்றுநோய் வராமல் தடுக்கும் ஊதா நிற உருளைக்கிழங்கு தெரியுமா?





புற்றுநோய் வராமல் தடுக்கும் ஊதா நிற உருளைக்கிழங்கு தெரியுமா?

0
உருளைக் கிழங்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதே உருளைக் கிழங்கு குடும்பத்தை சேர்ந்த கிழங்கு என்றால் ஸ்வீட் பொட்டேட்டோ, அது தான் சர்க்கரை வள்ளி கிழங்கு ஞாபகத்திற்கு வரும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் ஊதா நிற உருளைக்கிழங்கு

ஆனால், அதே குடும்பத்தை சேர்ந்த ப்பர்புள் பொட்டேட்டோ பற்றி கேள்விப் பட்டிருக்கீர்களா? ஊதா நிறத்தில் இந்த உருளைக் கிழங்கு இருக்கும்.

ஏராளமான சத்துக்களை தன்னுள்ளே இது மறைத்து வைத்துள்ளது. பொதுவாக இந்த உருளைக் கிழங்கு வகை தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

சத்து நிறைந்த உணவுகளை தேடி தேடி சாப்பிடுவதை பழக்கமாக கொண்ட நாம் இப்போது, சத்து நிறைந்த ஊதா உருளைக் கிழங்கை பற்றி இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

அது என்ன ஊதா உருளைக் கிழங்கு?

இந்த ஊதா நிற உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், மிளகு மற்றும் தக்காளி வகை குடும்பத்துடன் நெருங்கிய தொடர் புடையது.

உருண்டை வடிவத்தில், ஊதா, நீலம், சில சமயங்களில் கருப்பு நிற வெளிபுற தோலுடன், உள்ளே ஊதா நிற கிழங்கை கொண்டது.
அது என்ன ஊதா உருளைக் கிழங்கு?
இந்த கிழங்கை சமைத்தால், ஒரு வகை மண் வாசனையுடன் கூடிய நட்ஸ் சாப்பிடுவது போன்று இருக்கும்.

ஊதா உருளையில் உள்ள அதிகப் படியான அந்தோசியனின் எனும் ஆன்டி-ஆக்சிடன்ட் தான் இந்த கிழங்கு ஊதா நிறத்தில் இருப்பதற் கான காரணம்.

ஊதா உருளைக் கிழங்கின் பொதுவான வகைகள் என்றால், காங்கோ, ஆல் ப்ளூ , ஊதா ப்பர்புள் மெஜட்டி, ப்பர்புள் பெருவியன் மற்றும் ப்பர்புள் ஃபீஸ்டா ஆகிய வற்றை கூறலாம்.

ஊதா உருளைக் கிழங்கில் உள்ள சத்துக்கள்:

ஊதா உருளைக் கிழங்கில் புரதம். பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பி, அது மட்டுமல்லாது, சாதாரண உருளைக் கிழங்கை விட 4 மடங்கு அதிகமான ஆன்டி-ஆக்சிடன்ட் போன்றவை உள்ளன.

ஊதா உருளைக் கிழங்கின் மருத்துவ குணங்கள்:

சீரான இரத்த அழுத்தம்
சீரான இரத்த அழுத்தம்

அமெரிக்க வேதியியர் சமூகத்தின் அடிப்படையில், ஊதா உருளைக் கிழங்கை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என தெரிகிறது.

இதற்கு காரணம், இதில் உள்ள குளோரோஜெனிக் எனும் பைடோகெமிக்கல் அதிகப் படியான இரத்த அழுத்தத்தை குறைத்திட உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்
ஊதா உருளையில் உள்ள பாலிபெனோல் ஆன்டி ஆக்சிடன்ட் எனும் அந்தோசியனின், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் செல்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் நாள்பட்ட அழற்சி, புற்றுநோய், ஆண் மலட்டுத் தன்மை போன்ற வற்றை ஏற்படுத்தக் கூடும்.

ஒரு ஆய்வில் ஊதா உருளைக் கிழங்கு சாப்பிடுவது உடலில் ஆன்டி ஆக்சிடன்ட் அளவை அதிகரிக்கிறது என்பது கண்டறியப் பட்டுள்ளது.

இரத்த உறைவு ஏற்படுவதை தடுக்கிறது
இரத்த உறைவு ஏற்படுவதை தடுக்கிறது
உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு நச்சுயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குளோரோஜெனிக் அமிலம் இரத்தக் கட்டிகளைக் குவிப்பதை தாமதப் படுத்தும். இதனால் இரத்த உறைவு உருவாகாமல் தடுக்கிறது.

புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது
புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது

ஊதா உருளைக் கிழங்கில் உள்ள சில சத்துக்களின் கலவை, மார்பக புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சில ஆய்வுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

ஊதா உருளைக் கிழங்கின் சாறு புற்று நோய் செல்களை அழிப்பதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.

மலச்சிக்கலை தடுக்கிறது
மலச்சிக்கலை தடுக்கிறது
மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும் நார்ச் சத்தானது ஊதா உருளைக் கிழங்கில் அதிகமாகவே உள்ளது. மேலும், தசைப் பிடிப்பு, உடல் வீக்கம் போன்ற வற்றையும் இது தடுத்திட உதவுகிறது.

நார்ச் சத்தானது, குடல் வழியாக மலக்கழிவுகள் விரைந்து செல்ல உதவுகிறது. இதனால், மலச்சிக்கல் தடுக்கப் படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
அட்வான்ஸஸ் இன் நியூட்ரிஷன் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் அடிப்படை யில், ஊதா உருளைக் கிழங்கில் உள்ள அந்தோசியனின், கரோனரி இதய நோய் மற்றும் இதய நோயால் இறப்புகளில் அளவை குறைக்க உதவுவது கண்டறியப் பட்டுள்ளது.

ஊதா உருளைக் கிழங்கால் உண்டாகக் கூடும் ஆரோக்கிய பாதிப்புகள்:
ஊதா உருளைக் கிழங்கால் உண்டாகக் கூடும் ஆரோக்கிய பாதிப்புகள்

ஊதா உருளைக் கிழங்கு வழக்கமான உருளைக் கிழங்கை விட குறைவான கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும் அவற்றை அதிக அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக் கூடும்.

எனவே, நீரிழிவு நோயால் அவதிப் படுபவர்கள் ஊதா உருளைக் கிழங்கை அதிக அளவில் உட்கொள்வதில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உணவில் ஊதா உருளைக் கிழங்கை எப்படி யெல்லாம் சேர்ப்பது?
உணவில் ஊதா உருளைக் கிழங்கை எப்படி யெல்லாம் சேர்ப்பது?
பச்சை சாலட்டில் வேக வைத்த ஊதா உருளைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். சாதாரண உருளைக் கிழங்கு போலவே இதனையும் வேக வைத்து பிசைந்து தாளித்து, மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

ஊதா உருளைக் கிழங்கை நறுக்கி ஆலிவ் எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் ரோஸ்மேரி ஆகிய வற்றை சேர்த்து சுமார் 20 நிமிடங் களுக்கு வறுத்தெடுத்து சுவைக்கலாம்.

உருளைக் கிழங்கு சாலட் தயாரிக்கவும் நீங்கள் ஊதா உருளைக் கிழங்கை பயன் படுத்தலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)