நுங்கு மில்க் ஷேக் செய்வது | Nung Milk Shake Recipe !





நுங்கு மில்க் ஷேக் செய்வது | Nung Milk Shake Recipe !

நுங்கு கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லை யினால் 
நுங்கு மில்க் ஷேக் செய்வது
அவதிப்படு பவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும்.

கோடை வெயிலை தவிர்க்க நுங்கு சாப்பிடுங்க. நுங்கில் சத்துகள் நிறைந்து உள்ளன.

தேவையானவை :

இளநுங்கு – 4

பால் – 2 கப்

சர்க்கரை – தேவையான அளவு

ரோஸ் எசன்ஸ் – சிறிது

ஐஸ் க்யூப்ஸ் – சிறிது

செய்முறை:

நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பாலை காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும். 

மிக்சியில் நுங்கு, பால், சர்க்கரை, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிது நுங்கை மிதக்க விட்டு அருந்தலாம்.
Tags: