கோங்குரா சிக்கன் குழம்பு செய்வது எப்படி?





கோங்குரா சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

தினசரி உங்கள் உணவில் கோழிக்கறியை சேர்த்து வந்தால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
கோங்குரா சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
கோழிக்கறியில் உள்ள சேர்மங்கள் தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை குறைப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைப்பதில் முக்கியப்பங்கு வகுக்கிறது. 

இயல்பாக சிக்கன் பெண் குழந்தைகளுக்கு அவ்வளவு நல்லது அல்ல என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு. 

இது ஒரு பக்கம் இருந்தாலும், பெண்கள் ஆரோக்கியமான கருவுறதல் செயல்பாடு மற்றும் ஆண்களின் சிறந்த மற்றும் தரமான விந்து உற்பத்திக்கு உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். 
அந்த வகையில், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள் தினசரி போதுமான அளவு சிக்கன் எடுத்துக் கொள்வது நல்லது. 

சிக்கன் துண்டுகளை எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிடுவது, தேவையற்ற LDL கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி கோங்குரா சிக்கன் குழம்பு. இன்று இந்த கோங்குரா சிக்கன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை – 1 கப்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

தனியா – 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

வேக வைத்த கோழிக்கறி – 250 கிராம்

வெங்காயம் – 2

காய்ந்த மிளகாய் – 3

நெய் -1 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளிச்சக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோழிக் கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.  வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். 
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.சூப்பரான கோங்குரா சிக்கன் குழம்பு ரெடி!
Tags: