மக்காசோளம் கீரை கடையல் செய்வது | Maize Spinach Recipe !





மக்காசோளம் கீரை கடையல் செய்வது | Maize Spinach Recipe !

0
தேவையான பொருட்கள்

மக்காசோளம் – கால் கப்

பாலக் கீரை – ஒரு கப் (அரைத்தது)

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

சின்ன வெங்காயம் – நான்கு

பச்சைமிளகாய் – இரண்டு (நறுக்கியது)

பூண்டு – பத்து பல்

காய்ந்த மிளகாய் – இரண்டு

கடுகு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

தனியா தூள் – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

கரிவேபில்லை – சிறிதளவு

புலி கரைச்சல் – கால் கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

நல்லெண்ணெய் – இரண்டு தேகரண்டி

செய்முறை
மக்காசோளம் கீரை கடையல்

ஒரு பாத்திரத்தில் பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாய், தண்ணீர் சிறிதளவு சேர்த்து பாதி வேகவிட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மக்காசோளம், தக்காளி ஆகிய வற்றை ஒவொன்றாக சேர்த்து 

நன்றாக வதக்கி பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, புலி கரைச்சல் ஆகிய வற்றை சேர்த்து 

இரண்டு நிமிடம் கழித்து அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்த மல்லி துவி ஏறகவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)