பல நோய்களை சரிபடுத்தும் இந்த டீயைப் பற்றி தெறியுமா?





பல நோய்களை சரிபடுத்தும் இந்த டீயைப் பற்றி தெறியுமா?

அஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்தது தான் பர்டாக் செடி. இதன் தாவர பெயர் ஆர்க்டியம் லாப்பா. இது சூரியகாந்தி மற்றும் டெய்சி செடிகளை ஒத்தது. வடக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இந்த தாவரம் வளர்க்கப் படுகிறது. 
பல நோய்களை சரிபடுத்தும் இந்த டீ

மேற்கத்திய மூலிகை மருந்துகள் மற்றும் சீன மருத்துவத்தில் பல்வேறு உடல் உபாதை களைப் போக்க இந்த தாவரம் பயன்படுத்தப் படுகிறது.

பர்டாக் வேர்களில் எண்ணெய்களுடன், டானின்கள், தாவர ஸ்டெரோல்கள், குவெர்செட்டின், பினோலிக் அமிலங்கள் மற்றும் லுடோலின் எனப்படும் முக்கியமான சேர்மங்கள் உள்ளன. 
இந்த வேர்களின் ஆரோக்கிய நன்மை களுக்கு இவை அனைத்தின் இருப்பும் ஒரு முக்கிய காரணமாகும். பாரம்பரியமாக, பர்டாக் வேர்கள் சிறுநீர் பிரிப்பதற்கு மற்றும் செரிமானத்திற்கு உதவுவதற் காக பயன்படுத்தப் பட்டது. 

தற்போது, ஆராய்ச்சி யாளர்கள் அதன் பிற சுகாதார நன்மைகளை கண்டு பிடித்துள்ளனர். இந்த கட்டுரையில் நாம் அவற்றைப் பற்றி தான் காண விருக்கிறோம்.

பர்டாக் வேரின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்!

புற்றுநோயைத் தடுக்கிறது
புற்றுநோயைத் தடுக்கிறது
பர்டாக் வேர்களில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக புற்று நோயைத் தடுக்கும் சிறந்த திறனைக் கொண்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டு ஆய்வில், மார்பக புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியை பர்டாக் ரூட் குறைக்கக் கூடும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது
இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது

அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு அல்லது க்ளுக்கோஸ் அளவு நீரிழிவு நோயை உண்டாக்குகிறது. 

பர்டாக் வேர்களுக்கு நீரிழிவு எதிர்ப்பு தன்மை இருப்பதால், இன்சுலின் அளவு அதிகரிக்காமல் தடுக்க பர்டாக் வேர்கள் உதவுகிறது.

இரத்தத்தை சுத்தம் செய்கிறது

பாரம்பரிய மருத்துவத்தில் இரத்தத்தை சுத்திகரிக்க பர்டாக் வேர்கள் பயன்படுத்தப் பட்டன. 2011 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில், பர்டாக் வேர்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும். 
இதனால் இரத்தம் தூய்மை யாக்கப்பட்டு, இரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அழற்சியைக் குறைக்கிறது
இரத்தத்தை சுத்தம் செய்கிறது
பர்டாக் வேர்கள் சக்திவாய்ந்த ஆன்டி -ஆக்ஸிடன்ட்டு களைக் கொண்டுள்ளது. அவை செல்களுக்கு தீங்கு உண்டாக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. 

ருமேடிக் நோய்களின் சர்வதேச இதழில் வெளி யிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கீல்வாத நோயாளி களுக்கு இரத்தத்தில் உள்ள அழற்சி குறிப்பான்களை பர்டாக் ரூட் குறைக்கிறது என்று கூறப்படுகிறது.

சரும பாதிப்புகளை நிர்வகிக்கிறது
சரும பாதிப்புகளை நிர்வகிக்கிறது

பர்டாக் வேர்கள் நீண்ட காலமாக எக்ஸிமா, கட்டிகள், சொரியாசிஸ் போன்ற சரும நிலை களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. 

இதனை சருமத்தின் மேற்புறம் தடவுவதால், இந்த வேரில் காணப்படும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உண்டாகும் பாதிப்பைப் போக்க உதவுகிறது.
பர்ன் கேர் & ரிசர்ச் ஜர்னலில் வெளி யிடப்பட்ட ஒரு ஆய்வில், பர்டாக் வேர்கள் மேற்பூச்சு தீக்காயங் களுக்கு சிகிச்சை யளிக்க உதவக்கூடும் என்று கண்டறியப் பட்டது. 

பர்டாக் வேரின் பக்க விளைவுகள்
பர்டாக் வேரின் பக்க விளைவு
* உங்களுக்கு கிரிஸான்தமம் அல்லது டெய்சி போன்ற பூக்களுக்கு ஒவ்வாமை இருந்தால், பர்டாக் வேர் ஒவ்வாமை எதிர் வினைகளை ஏற்படுத்தக் கூடும்.

* இந்த வேர் இயற்கையில் டையூரிடிக் என்னும் சிறுநீர் பிரிப்பு தன்மையை கொண்டதாகும். எனவே உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து இருந்தால் இதனை எடுக்கக் கூடாது.

* கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மையை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் பர்டாக் வேர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

* நீங்கள் டையூரிடிக், ரத்த மெலிவு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டிருந்தால் பர்டாக் வேர் உட்கொள்ள வேண்டாம்.

பர்டாக் வேர்களை எவ்வாறு பயன்படுத்துவது?
பர்டாக் வேர்கள் தேநீர், மூலிகை டின்ச்சர் மற்றும் மாத்திரை வடிவங்களில் கிடைக்கிறது

குறிப்பு:

பர்டாக் வேர்களை உட்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
Tags: