கத்தரிக்காய் தயிர் பச்சடி செய்வது | Eggplant Yogurt Pachadi Recipe !





கத்தரிக்காய் தயிர் பச்சடி செய்வது | Eggplant Yogurt Pachadi Recipe !

0
தேவையானவை:
புளிக்காத புது தயிர் – 1 கப்,

சிறிய கத்தரிக்காய் – 4,

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2, பூண்டு – 2 பல்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கத்தரிக்காய் தயிர் பச்சடி
கத்தரிக்காயை நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து நசுக்கி வையுங்கள். 

எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய கத்தரிக்காய் துண்டு களை சிறிது சிறிதாகப் போட்டு, நன்கு வேக விட்டெடுங்கள்.

ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை எடுத்து விடுங்கள்.
பரிமாறும் பொழுது பொரித்த கத்தரிக்காய், அரைத்த விழுது, நசுக்கிய பூண்டு, உப்பு ஆகிய வற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து, கடுகை தாளித்துக் கொட்டுங்கள். 

வித்தியாசமான ருசியுடன் இருக்கும் இந்த தயிர்பச்சடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)