வெள்ளரி – வெங்காயம் தயிர் பச்சடி செய்வது !





வெள்ளரி – வெங்காயம் தயிர் பச்சடி செய்வது !

0
தேவையானவை:

புளிக்காத புது தயிர் – 1 கப்,

வெள்ளரி – பாதி,

பெரிய வெங்காயம் – 1,

தக்காளி (சற்று கெட்டியாக) – 1,

பச்சை மிளகாய் – 2,

உப்பு – தேவைக்கு,

மல்லித்தழை (விருப்பப் பட்டால்) – சிறிது. 

செய்முறை:
வெள்ளரி – வெங்காயம் தயிர் பச்சடி
வெள்ளரி, வெங்காயத்தை தோல் சீவி, நீளவாக்கில் மெல்லிய தாக நறுக்குங்கள். தக்காளி, பச்சை மிளகாயையும் மெல்லியதாக நறுக்குங்கள். 
எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து, தயிர், உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். 

உடலுக்கு சத்தையும் நாவுக்கு சுவையையும் அள்ளித்தரும் பச்சடி இது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)