பிரவுன் சேமியா பிரியாணி ரெசிபி | Brown Semia Biryani Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை:

சேமியா – 200 கிராம்

கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, காலிஃப்ளவர் கலவை – 150 கிராம்

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 (சற்றுபெரிய ஸ்லைஸ் களாக நறுக்கவும்)

சிறிய‌ தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 3 (கீறி விடவும்)

கறிவேப்பிலை – சிறிதளவு

புதினா இலைகள் – சிறிதளவு

கொத்த மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

பிரிஞ்சி இலை – 2

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 2
செய்முறை:
பிரவுன் சேமியா பிரியாணி ரெசிபி
அடுப்பில் கடாயை வைத்து சில சொட்டு எண்ணெய் விட்டு சேமியா சேர்த்து கோல்டன் பிரவுன் நிறம் ஆகும் வரை வறுத்து தனியாக வைக்கவும். 
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 5 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும் போது சேமியாவைச் சேர்த்து மூன்று நிமிடம் வேக விடவும்.

வெந்ததும் தண்ணீரை வடித்து, ஒரு ப்ளேட்டில் சேர்த்து ஆற விடவும். 

காய்கறிகளை மைக்ரோவேவ் பவுலில் சேர்த்து சிறிது தண்ணீரைத் தெளித்து, இரண்டு நிமிடம் அவனின் உள்ள வேகவைத்து பின்பு வெளியே எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.

இதில் பெரிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
இதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி, புதினா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், கொத்த மல்லித்தழை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கி, வெந்த சேமியா, காய்கறிகள் சேர்க்கவும். 
மேலும் இரண்டு நிமிடம் மிருதுவாகக் கிளறி நறுக்கிய கொத்த மல்லித்தழை சேர்த்து மூடி போட்டு சிம்மில் வைத்து மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கிப் பரிமாறவும். இதற்கு ரைத்தா செம காம்பினேஷன்.
பிரவுன் சேமியா பிரியாணி ரெசிபி | Brown Semia Biryani Recipe ! பிரவுன் சேமியா பிரியாணி ரெசிபி | Brown Semia Biryani Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 11, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚